மேலும் அறிய

RCB-W vs GG-W, 1 Innings Highlight: டங்க்லி காட்டடி, ஹெர்லின் மிரட்டல் அடி..! ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா பெங்களூர்..?

WPL 2023, RCB-W vs GG-W: ஆர்.சி.பி அணிக்கு வெற்றி இலக்காக 202 ரன்களை குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.

முதலாவது மகளிர் பிரீமியர் லீக் போட்டியானது 5 அணிகளுடன் இந்தாண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்தியன் பிரீமியர் லீக்கை போன்று, மகளிர் பிரீமியர் லீக்(WPL) தொடரையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. 

மகளிர் பிரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி வருகின்ற மார்ச் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 22 போட்டிகள் என அட்டவணையிடப்பட்டு மும்பையில் உள்ள இரண்டு மைதானங்களில் இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 

குஜராத் - பெங்களூர்:

இன்று மார்ச் 8ஆம் தேதி பெஙகளூர் அணியும் குஜராத் அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டி, மும்பை போர்பர்ணி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி, குஜராத் அணி பேட்டிங்கை தொடங்கியது. குஜராத் அணியின் சார்பில் மேக்னா மற்றும் டங்க்லி ஓப்பனர்களாக களமிறங்கினர்.  போட்டியின் முதல் ஓவர் மெய்டனாக வீசப்பட்டது. ஆர்.சி.பி அணியின் ஷூட் சிறப்பாக பந்து வீசி மெய்டன் ஓவராக மாற்றினார். குஜராத் அணி முதல் ரன் பவுண்டரியாக இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் டங்க்லியால் அடிக்கப்பட்டது.  அதன் பின்னர், மூன்றாவது ஓவரில், முதல் இரண்டு பந்துகளில் மேக்னா பவுண்டரிகளை பறக்கவிட்டு அதகளப்படுத்தியது மட்டும் இல்லாமல், அந்த ஓவரில் மட்டும் மூன்று பவுண்டரிகளை விரட்டினார்.

அதிவேக அரைசதம்:

ஆனால் அதே ஓவரின் கடைசிப் பந்தில் மேக்னா அவுட் ஆகி வெளியேறினார். விக்கெட் விழுந்த பின்னரும் தனது அதிரடியான ஆட்டத்தினை டங்க்லி மாற்றிக் கொள்ளவில்லை. அவர் நான்காவது ஓவரில் மட்டும், இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் பறக்க விட்டு ஆர்.சி.பி. அணிக்கு சவாலாக இருந்தார். விக்கெட் விழுந்த பின்னரும் தனது அதிரடியான ஆட்டத்தினை டங்க்லி மாற்றிக் கொள்ளவில்லை.

அவர் நான்காவது ஓவரில் மட்டும், இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் பறக்க விட்டார். அவர் 18 பந்தில் 9 பவுண்டரி 2 சிக்ஸர் பறக்கவிட்டு மகளிர் பிரீமியர் லீக்கில் அதிவேக அரைசதம் விளாசினர். அதிரடியாக ஆடிவந்த டங்க்லி 28 பந்தில் 65 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவர் 11 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டது குறிப்பிடத்தக்கது. 

டங்க்லி அவுட் ஆன பிறகும் குஜராத் அணியின் ரன்ரேட் குறையவில்லை. அதன் பின்னர் களமிறங்கிய குஜராத் வீராங்கனைகள் அனைவரும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டுவதில் குறியாக இருந்தனர். குஜராத அணியின் ஆட்டத்திலேயே அந்த அணி 200 ரன்களை எளிதில் கடக்கும் என்ற நிலையில் இருந்தது. 16 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி  4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து இருந்தது.

202 ரன்கள் டார்கெட்:

சிறப்பாக விளையாடி வந்த ஹர்லின் 35 பந்தில் 53 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் 8 பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசினார்.  அதைத் தொடர்ந்து 17வது ஓவரில் மட்டும் அவர் ஹாட்ரிக் பவுண்டரிகளை பறக்கவிட்டார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்து ரன்கள் குவித்தது. ஆர்.சி.பி அணி சார்பில், ஹெதர் நைட் மற்றும் ஸ்ரேயங்க்கா பட்டீல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். இந்த போட்டியில் இறுதி 3 ஓவர்கள் மட்டும் ஆர்.சி.பி வசம் இருந்தது. ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆர்.சி.பி. அணி விளையாடவுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget