Ishan Kishan: இஷான் கிஷன் விஷயத்தில் என்ன நடக்கிறது? ராகுல் ட்ராவிட் சொன்னது இதுதான்!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படாதது குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ அதிருப்தி?
தென்னாப்பிரிக்க தொடருக்கு பின்னர் சொந்த நாட்டில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி நேற்று (ஜனவரி 11) ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முன்னதாக, இந்த தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் நீக்கப்பட்டனர். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதல் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
முன்னதாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் இஷான் கிஷன் விலகினார். அதோடு முன்னாள் கேப்டன் தோனியுடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாடினார். இதனிடையே இஷான் கிஷன் மீது பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
எந்த அதிருப்தியும் இல்லை:
இதனால் இவர் மீது பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் பேசுகையில், "இஷான் கிஷன் மீது யாருக்கும் எந்த அதிருப்தியும் இல்லை. அவர் ஆஃப்கானிஸ்தான் தொடரில் விளையாட முடியாது முன்னதாகவே விலகிவிட்டார். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் போதே இஷான் கிஷன் விடுப்பு கேட்டார். அதற்கு அனைத்து ஆதரவாக நாங்கள் இருந்து வருகிறோம்.
ஆப்கானிஸ்தான் டி 20 தொடரில் இருந்து விலகியது இஷான் கிஷன் தான். ஒருவேளை அவர் விடுப்பில் இருந்து மீண்டு வந்துவிட்டால், நிச்சயம் உள்ளூர் கிரிக்கெட்டை விளையாடி, இந்திய அணிக்கு விளையாட தயாராக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் ஸ்ரேயாஸ் அய்யர் மீதும் எந்த ஒழுங்கு நடவடிக்கையெல்லாம் எடுக்கவில்லை. டி20 கிரிக்கெட்டில் ஏராளமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அவர் தென்னாப்பிரிக்காவிலும் டி20 கிரிக்கெட் விளையாடவில்லையே" என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் டெபகிஷ் சக்ரபோர்த்தி பேசுகையில், “இஷான் கிஷன் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. அதேபோல், போட்டியில் இடம்பெறுவது குறித்து எங்களிடம் ஏதும் தெரிவிக்கவில்லை. அவர் எப்போது வந்து எங்களிடம் பேசினாலும் நிச்சயம் ஆடும் லெவனில் இடம் பெறலாம் என்று" கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs AFG T20I: அரை சதம் விளாசிய ஷிபம் துபே... 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!
மேலும் படிக்க: Watch: வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த கில்லால் ரன் ஆவுட்; திட்டிக்கொண்டே பெவிலியன் திரும்பிய ரோகித் - வீடியோ வைரல்