மேலும் அறிய

IND vs WI: தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி; மல்லுக்கட்டும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்..!

IND vs WI: இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று வகை கிரிக்கெட்டில் விளையாடு வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று வகை கிரிக்கெட்டில் விளையாடு வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகள் ஏற்கனவே முடிந்து விட்டது. இதில் இந்திய அணி முதல் போட்டியையும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது போட்டியையும் வென்றது. இந்நிலையில் மூன்றாவது போட்டி ட்ரைனிடாட் பகுதியில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. இதற்கு முன்னதாக 7 மணிக்கு டாஸ் போடப்படும். 

முதல் ஒருநாள் போட்டி 

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கேப்டன் ஹோப் மட்டும் 49 ரன்கள் சேர்த்தார். மற்ற யாரும் சிறப்பாக சோபிக்காததால் 23 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் வெற்றிக்கான வாய்ப்பை பிரகாசமாகத்தான் வைத்திருந்தது. இறுதியில் இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இரண்டாவது ஒருநாள் போட்டி 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தினார். சீனியர் ப்ளேயர்களான ரோகித் சர்மா, விரோட் கோலி இந்த போட்டியில் விளையாடவில்லை. இந்திய அணி பேட்டிங் செய்வதால் அதிரடியான ஆட்டத்தை இந்திய அணி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க, அவர்களுக்கு  ஒட்டுமொத்த இந்திய அணியும் அல்வா கொடுத்தது என்று சொல்லும் அளவிற்குதான் பேட்டிங் இருந்தது. குறிப்பாக இந்திய அணி வீரர்கள் மத்தியில் பொறுப்பான ஆட்டத்தை பார்க்க முடியவில்லை. முதல் போட்டியில் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியில் சிறப்பான முறையில் கம்பேக் கொடுத்து அசத்தினர். இறுதியில் இந்திய அணி 40.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 181 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதனால் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளதால், இரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாகச் செல்லும் எனவும், ரோகித் மற்றும் விராட் அணிக்கு திரும்புவார்கள் எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

தலைப்பு செய்திகள்

IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Embed widget