மேலும் அறிய

Kieron Pollard: சூப்பர் அப்பு! இங்கிலாந்துக்கு அடுத்த கப் ரெடி! அணியில் இணைந்த டி20 ’லக்கி சார்ம்’ பொல்லார்ட்!

2024 டி20 உலகக் கோப்பை வரை இங்கிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளராக பொல்லார்ட் அணியுடன் இணைந்திருப்பார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கீரன் பொல்லார்ட் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பெயர் ஒலிக்கும் சில வீரர்களில் ஒருவர். இவரது அதிரடி பேட்டிங்கால் பல முன்னணி அணிகள் கதிகலங்கியுள்ளது. உலக கிரிக்கெட்டை பல பரபரப்பை ஏற்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. 

இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு 2024 டி20 உலகக் கோப்பை போட்டியானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் அறிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் பொல்லார்ட் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

வெளியான தகவலின்படி, 2024 டி20 உலகக் கோப்பை வரை இங்கிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளராக பொல்லார்ட் அணியுடன் இணைந்திருப்பார். வெஸ்ட் இண்டீஸில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளதாலும், உள்ளூர் நிலைமைகள் குறித்து அவருக்கு தெரியும் என்பதாலும்  தனது நிபுண கருத்துகளை தருவார். 

கடந்த 2022 ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து அணி. அந்த வகையில், நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து உள்ளது. இவ்வாறான நிலையில், பொல்லார்ட்டின் வருகையால் இங்கிலாந்து அணிக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

கேப்டனாகவும் அசத்தல்: 

36 வயதாக பொல்லார்ட் 2012ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்துள்ளார். இதுவரை உலகளவில் 600க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் பொல்லார்ட்க்கு உள்ளது. மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 63 சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள பொல்லார்ட், 1569 ரன்களையும் குவித்துள்ளார். மேலும், 101 போட்டிகளில் பந்துவீசி மொத்தம் 42 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 101 டி20 போட்டிகளில் 83 இன்னிங்ஸ்களில் 1569 ரன்கள் குவித்துள்ளார் போலார்ட். ஐபிஎல் போன்ற போட்டிகளில் 637 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 12,390 ரன்கள் எடுத்துள்ளார்.

மும்பை அணிக்காக பொல்லார்ட்டின் பங்கு:

உலகின் மிகவும் பிரபலமாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றிருந்தபோது, 5 முறையும் அணியில் இடம் பெற்றிருந்தார். டி20 கிரிக்கெட்டில் 637 போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இவருக்கு உள்ளது. 

கடந்த ஆண்டு பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் பயிற்சியாளராக இருந்துள்ளார். இருப்பினும்,  பொல்லார்ட் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறினாலும், சமீபத்தில் நடந்து முடிந்த கரீபியன் பிரிமீயர் லீக்கில் தனது தலைமையில் கீழ் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். இந்தியன் பிரீமியர் லீக்கில் மிகவும் வெற்றிகரமான உரிமையாளரான மும்பை இந்தியன்ஸில் பேட்டிங் பயிற்சியாளராகவும், இங்கிலாந்து அணியில் ஆலோசகர் பயிற்சியாளராகவும் கீரன் பொல்லார்டின் நியமனம் அவரது ஆளுமையை வலுப்படுத்துகிறது.

 வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என தொடரை கைப்பற்றியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடம்பிடித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றிய அவைக்காவலர்கள் - நடந்தது என்ன?
அடம்பிடித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றிய அவைக்காவலர்கள் - நடந்தது என்ன?
TN Assembly Session LIVE: கேள்வி நேரத்தை ஒத்திவைக்க கோரி அமளி - அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
TN Assembly Session LIVE: கேள்வி நேரத்தை ஒத்திவைக்க கோரி அமளி - அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
TN Weather Update: நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

GV Prakash on Kallakurichi kalla sarayam : ”இழப்பீடுகள் எதையும் ஈடுசெய்யாது” ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்Vijay at Kallakurichi : கள்ளக்குறிச்சியில் விஜய்! நேரில் வந்து ஆறுதல்Arvind Kejriwal bail : கெஜ்ரிவாலுக்கு ஜாமின்! எப்போது வெளியே வருகிறார்? கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மிMK Stalin on Kallasarayam  : ”விஷச்சாராயம் எப்படி வந்துச்சி..களத்துக்கு போ உதய்” ஆணையிட்ட ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடம்பிடித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றிய அவைக்காவலர்கள் - நடந்தது என்ன?
அடம்பிடித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றிய அவைக்காவலர்கள் - நடந்தது என்ன?
TN Assembly Session LIVE: கேள்வி நேரத்தை ஒத்திவைக்க கோரி அமளி - அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
TN Assembly Session LIVE: கேள்வி நேரத்தை ஒத்திவைக்க கோரி அமளி - அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
TN Weather Update: நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு, பலி எண்ணிக்கை உயருமா?
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம்: மெத்தனால் விற்பனை செய்த முக்கிய குற்றவாளி கைது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம்: மெத்தனால் விற்பனை செய்த முக்கிய குற்றவாளி கைது
Latest Gold Silver Rate: மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை.. வெள்ளி விலையும் உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி..!
மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை.. வெள்ளி விலையும் உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி..!
டெல்லி முதல் தமிழ்நாடு வரை.. இந்தியாவை உலுக்கிய கள்ளச்சாராயம் மரணங்கள்..
டெல்லி முதல் தமிழ்நாடு வரை.. இந்தியாவை உலுக்கிய கள்ளச்சாராயம் மரணங்கள்..
கோடீஸ்வரனாக போகும் ராசிகள் எவை?  12 ராசிகளுக்கான குருவின் ரோகினி பெயர்ச்சி பலன்கள்..!
கோடீஸ்வரனாக போகும் ராசிகள் எவை? 12 ராசிகளுக்கான குருவின் ரோகினி பெயர்ச்சி பலன்கள்..!
Embed widget