Watch Video: போட்டியின்போது ஆபாசமாக விரல் காட்டிய வீரர்கள்... அபராதம் விதித்த பாக்., சூப்பர் லீக் அமைப்பு
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்றிருக்கும் இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
ஜனவரி 27-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 27-ம் தேதி வரை பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. லீக் சுற்று போட்டியின்போது, சொஹைல் தன்வீர் - பென் கட்டிங் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து, இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை போல, மற்ற நாடுகளிலும் டி20 தொடர்கள் நடைபெற்று வருகிறது. அவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்றிருக்கும் இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி 15-ம் தேதி அன்று, பெஷாவர் சல்மி, குவேட்டா க்ளாடியேட்டர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் வீரர் சொஹைல் தன்வீருக்கும், ஆஸ்திரேலிய வீரர் பென் கட்டிங்கிற்கும் மோதல் ஏற்பட்டது. 2018-ம் ஆண்டு நடந்த பழையை சம்பவத்தை மனதில் வைத்து கொண்டு, இரு வீரர்களும் களத்தில் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வீடியோவை காண:
The entire Sohail Tanvir vs Ben Cutting battle. From 2018 to 2022. pic.twitter.com/XuV18PyiZ3
— Haroon (@hazharoon) February 15, 2022
2018 கரிபியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடியபோது, பென் கட்டிங்கின் விக்கெட்டை எடுத்த தன்வீர், நடுவிரலை காட்டி விக்கெட்டை கொண்டாடினார். அதனை அடுத்து இந்த ஆண்டு நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில், குவேட்டா அணிக்காக விளையாடி வரும் பென் கட்டிங் தன்வீர் ஓவரில் சிக்சர்களை விளாசி தள்ளினார். ரன்களை குவித்து அதிரடி காட்டிய பென் கட்டிங், 2018 சம்பவத்திற்கு பதிலடி தரும் வகையில் தன்வீரைப் பார்த்து நடுவிரல் காட்டினார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், தன்வீரிடம் கேட்ச் கொடுத்து பென் கட்டிங் அவுட்டாகி வெளியேறினார். பழிக்கு பழி தீர்த்தாக எண்ணி தன்வீர் மீண்டும் ஒரு முறை நடுவிரல் காட்டி விக்கெட்டை கொண்டாடினார்.
இரு அணிகள் மோதிய இந்த போட்டியில், பெஷாவர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. பென் கட்டிங் 36 ரன்கள் எடுத்திருந்தார். இலக்கை சேஸ் செய்த குவேட்டா அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
கிரிக்கெட்டில் இது போன்று முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட கிரிக்கெட் வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அபராதம் விதித்து உத்தரவிட்டது. போட்டி சம்பளத்தில் 15% அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியிட்ட தன்வீர், மன்னிப்பு கேட்டிருக்கிறார். எனினும், இச்சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்