Virat Kohli Records: 'கிங்' கோலிடா..! அதிவேக 25 ஆயிரம் ரன்கள்..! புதிய வரலாறு படைத்த ரன்மெஷின் விராட்...!
Virat Kohli Records: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட்கோலி படைத்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட்கோலி. இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தவிர்க்க முடியாத வீரராக உலா வருகிறார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் ஆடி வரும் விராட்கோலி 2வது இன்னிங்சில் புதிய வரலாறு படைத்தார். அதாவது மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட்கோலி படைத்தார்.
புதிய வரலாறு:

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலேயே விராட்கோலி இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தற்போது இந்த சாதனையை படைத்துள்ளார். சர்வதேச அளவில் 25 ஆயிரம் ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையையும் விராட்கோலி படைத்துள்ளார்.
முதலிடத்தில் சச்சின்:
சர்வதேச அளவில் அதிக ரன்களை குவித்துள்ள வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர் 34 ஆயிரத்து 357 ரன்களை குவித்து யாருமே நெருங்க முடியாத இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் குமாரா சங்கக்கரா உள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான சங்கக்கரா 28 ஆயிரத்து 16 ரன்களுடன் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரிக்கி பாண்டிங் 27 ஆயிரத்து 483 ரன்களுடனும், ஜெயவர்த்தனே 25 ஆயிரத்து 957 ரன்களுடனும், காலீஸ் 25 ஆயிரத்து 534 ரன்களுடனும் உள்ளனர்.
சர்வதேச அளவில் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை முறியடித்து வரும் விராட்கோலி கடந்த மூன்று ஆண்டுகளாக சதங்களை அடிக்காமல் இருந்தார். கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் கம்பேக் கொடுத்த விராட்கோலி அதன்பின்னர் தன்னுடைய வழக்கமான பாணியில் அடுத்தடுத்து சதங்களையும், அரைசதங்களையும் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினர்.
சச்சினை வீழ்த்துவாரா விராட்கோலி:
சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக சதங்களை விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க விராட்கோலிக்கு இன்னும் 4 சதங்கள் மட்டுமே தேவைப்படுவதால் அவர் இந்தாண்டு இந்த சாதனையை செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். விராட்கோலி இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 27 சதங்கள், 7 இரட்டை சதங்கள், 28 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 195 ரன்களை எடுத்துள்ளார். 271 ஒருநாள் போட்டிகளில் ஆடி 46 சதங்கள், 64 அரைசதங்களுடன் 12 ஆயிரத்து 804 ரன்களை எடுத்துள்ளார். 115 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம், 37 அரைசதங்கள் விளாசி 4 ஆயிரத்து 8 ரன்களை எடுத்துள்ளார்.