Virat Kohli 100th ODI: சாதனை படைத்த விராட்கோலி, ரிஷப் பண்ட்...! சாதனையை நழுவவிட்ட ரோகித் சர்மா...!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆடி வரும் விராட்கோலி, ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்துள்ளனர்.
![Virat Kohli 100th ODI: சாதனை படைத்த விராட்கோலி, ரிஷப் பண்ட்...! சாதனையை நழுவவிட்ட ரோகித் சர்மா...! virat kohli milestone 5th Indian player don 100th odi home soil scored 18 runs 2nd ODI against West Indies Virat Kohli 100th ODI: சாதனை படைத்த விராட்கோலி, ரிஷப் பண்ட்...! சாதனையை நழுவவிட்ட ரோகித் சர்மா...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/09/e50d8ec40ee45c72bc83d0556866cdd7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் கேப்டனுமாகியவர் விராட்கோலி. இந்திய அணிக்காக பல்வேறு அரிய சாதனைகளை படைத்துள்ள விராட்கோலி அகமாதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக புதிய சாதனை படைத்துள்ளார்.
விராட்கோலி இந்த போட்டியில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் அவர் இந்த போட்டியில் விளையாடியதன் மூலமாக ஒருநாள் போட்டியில் இந்தியா அணிக்காக சொந்த மண்ணில் 100 ஒருநாள் போட்டிகள் ஆடிய 5வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த போட்டியில் அவருக்கு பல்வேறு சாதனைகள் படைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், விராட்கோலி வெறும் 18 ரன்களே எடுத்ததால் அந்த சாதனைகளை படைக்கும் வாய்ப்பு நழுவிவிட்டது.
விராட்கோலி இந்த போட்டியில் 33 ரன்கள் எடுத்திருந்தால் ஜாம்பவான் கிரிக்கெட்டர் ஆலன் பார்டர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அடித்த 3 ஆயிரத்து 598 ரன்கள் என்ற சாதனையை முறியடித்திருப்பார். இந்த சாதனையை படைத்திருந்தால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்திருப்பார்.
மேலும், இந்த போட்டியில் அரைசதம் அடித்திருந்தால் ஒருநாள் போட்டியில் இந்திய மண்ணில் தோனி அடித்த அரைசதங்களின் எண்ணிக்கையை பின்னுக்கு தள்ளியிருப்பார். தோனியும், விராட்கோலியும் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டியில் 25 அரைசதங்களை அடித்துள்ளனர். ஆனால், ரிஷப் பண்ட் இந்த போட்டியில் 1 ரன் எடுத்ததன் மூலமாக ஒருநாள் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ரோகித் சர்மா இந்த போட்டியில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி வீரரான ரோகித் சர்மா இந்த போட்டியில் ஒருநாள் போட்டியில் 5 சிக்ஸர்களை விளாசியிருந்தால் 250 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருப்பார். ஆனால், இந்த போட்டியில் விராட்கோலி, ரோகித் சர்மா சாதனை படைக்கும் வாய்ப்பு நழுவிவிட்டது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று அகமாதாபாத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 237 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் 5 ரன்களிலும், ரிஷப் பண்ட் 18 ரன்னிலும், விராட்கோலி 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் 64 ரன்களும், கே.எல்.ராகுல் 49 ரன்களும் எடுத்தனர். தீபக்ஹூடா கடைசி கட்டத்தில் 29 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி ஆடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி சற்று முன்வரை 5 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)