Virat Kohli Blessed Baby Boy: இதுதான் காரணமா..! பிறந்த குட்டி ”கோலி”.. இன்ஸ்டாவில் சூப்பராக சொன்ன விராட் - அனுஷ்கா..!
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர்.

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர்.
விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த பிப்ரவரி 15ம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ மிகவும் மகிழ்ச்சியுடனும், எங்கள் இதயங்களின் அன்புடனும் கடந்த பிப்ரவரி 15ம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது என அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் ஆண் குழந்தைக்கு ஆகாய் என வாமிகாவின் குட்டி சகோதரனை இந்த உலகிற்கு வரவேற்கிறோம்!
View this post on Instagram
எங்கள் வாழ்வின் இந்த அழகான நேரத்தில் உங்கள் ஆசிகளையும், நல்வாழ்த்துகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த நேரத்தில் எங்களது நேரத்தை எங்களுக்காக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என பதிவிட்டிருந்தார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 4வது போட்டி வருகின்ற பிப்ரவரி 23ம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, தனிப்பட்ட காரணங்களால் தன்னை அணியில் இருந்து ஓய்வு அளிக்க வேண்டும் என விராட் கோலி பிசிசிஐ மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
விராட் கோலியின் இந்த கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ அவருக்கு விருப்ப விடுப்பு அளித்திருந்தது. இந்தநிலையில், விராட் கோலி விலகியதற்கான காரணம் என்ன என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். அதன்பிறகு, விராட் கோலி அம்மாவின் உடல்நிலை, விராட் கோலி - அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை என பல்வேறு யூகங்கள் கிளம்பியது.
இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, இன்று விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினர் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, தற்போது விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

