இதுவரை ஒரே ஒருவர் மட்டும் செய்த அரிய சாதனை… உலகக்கோப்பையில் செய்யப்போகும் ரோகித்-கோலி!
அதிரடி வீரர் ரோகித் ஷர்மாவும், கிளாசிக் வீரர் விராட் கோலியும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை ஒரு வீரர் மட்டுமே செய்துள்ள தனித்துவமான சாதனையை செய்யும் இடத்தில் உள்ளார்கள்.
டி20 உலகக்கோப்பைகளில் ஒரே ஒரு வீரர் மட்டுமே செய்த சாதனையை விராட் கோலியும், ரோகித் ஷர்மாவும் செய்ய இருக்கிறார்கள்.
அரிய சாதனை
டி20 உலகக் கோப்பையில், ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் இந்தியாவின் மிக முக்கியமான இரண்டு பேட்ஸ்மேனாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ரோஹித்தின் அதிரடி ஆட்டத்திறன், கோலியின் கிளாசிக் திறன் ஆகியவை எதிரணிக்கு அச்சத்தை தரும். எதிர்த்து விளையாடும் அணிகள் அவர்களை விரைவில் அவுட் செய்வதற்கான திட்டங்களை தீட்டிக்கொண்டிருப்பார்கள். இந்த இரு வீரர்களும் T20 உலகக் கோப்பைகளில் மிகச்சிறந்த சாதனை படைத்துள்ளனர். ரோஹித் சர்மாவின் சராசரி 38.50, கோஹ்லியின் சராசரி 76.81 வைத்துள்ளனர். உலகக் கோப்பையில் ஒரு புதிய சாதனையை இருவரும் செய்ய இருக்கிறார்கள். இந்த இரண்டு வீரர்களும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை ஒரு வீரர் மட்டுமே செய்துள்ள தனித்துவமான சாதனையை செய்யும் இடத்தில் உள்ளார்கள்.
உலகக்கோப்பை சாதனை
டி20 உலகக்கோப்பைகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 847 மற்றும் 845 ரன்கள் குவிந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, டி20 உலகக் கோப்பையில் 1000 ரன்களை கடந்த ஒரே வீரர் மஹேலா ஜெயவர்த்தனே தான். இந்த சாதனையை செய்ய ரோஹித்துக்கு இன்னும் 153 ரன்கள் தேவை, அதே நேரத்தில், கோஹ்லிக்கு இன்னும் 155 ரன்கள் தேவை.
T20 உலகக் கோப்பைகளில் ரன் குவிப்பு
ரோஹித் ஷர்மா இந்தியாவுக்காக உலகக் கோப்பைகளில் 30 இன்னிங்ஸ்களில் எட்டு அரைசதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். அவர் செஞ்சுரி எடுக்கவில்லை என்றாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 131.52 இல் உள்ளது. அதிகபட்ச சராசரி கொண்ட விராட் கோலி அசுர ஆட்டம் ஆடி, வெறும் 19 இன்னிங்ஸ்களில் 10 அரைசதங்கள் அடித்துள்ளார். இவர் 129.60 ஸ்ட்ரைக் ரேட் உடன் விளையாடி இந்திய அணிக்கு ஒரு பவர்ஹவுசாக செயல்பட்டு வருகிறார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.
இதில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக யாரை அணியில் சேர்ப்பது என்ற குழப்பத்தில் இருந்த இந்திய அணி கடைசியில் முகமது ஷமியை உள்ளே இழுத்துள்ளது. விளையாடும் அத்தனை அணிகளிலும் இருந்து இந்திய அணி பேட்டிங்கில் சிறந்த அணியாக இருந்தாலும், பவுலிங்கில் மிகவும் பின்தங்கி இருப்பதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இந்தியா வெல்வதற்கு ரன்கள் குவிப்பது மட்டும் போதாது, பவுலர்கள் ஃபார்முக்கு வந்து தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.