T20 WC India Squad 2022: உலககோப்பையில் இந்தியாவுக்காக களமிறங்கப் போகும் சிங்கங்கள் யார்..? யார்.? முழு விவரம்..!
T20 WC India Squad 2022: டி20 உலககோப்பையில் பங்கேற்க உள்ள 15 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலககோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்கான வீரர்களை அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவித்துவிட்டன. இந்திய அணியின் பெரும்பலமாக கருதப்படும் பும்ரா காயம் காரணமாக விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ள நிலையில், அவருக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
🚨 JUST IN: India have named their final 15-member squad for the #T20WorldCup 📝
— ICC (@ICC) October 14, 2022
Full details 👇
இந்த நிலையில், ரோகித்சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு :
கேப்டன் ரோகித்சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக்ஹூடா, ரிஷப்பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக்பாண்ட்யா, அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் படேல், புவனேஷ்குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப்சிங், முகமது ஷமி,