Sunil Gavaskar: ரோகித், கோலி சொதப்பல்: கவாஸ்கர் சொன்ன ரகசியம்! அடிலெய்டில் காத்திருக்கும் அதிசயம்!
இது எளிதானது அல்ல, குறிப்பாக பல மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களுக்கு கடினமாக இருக்கும் என்று கவாஸ்கர் தெரிவித்தார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். முன்னாள் கேப்டன் ரோகித் 14 பந்துகளில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், அதே நேரத்தில் கோலி 8 பந்துகளை சந்தித்து டக் அவுட்டாகி வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் இன்னிங்ஸை விளையாடிய பிறகு ஞாயிற்றுக்கிழமை ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டியில் மீண்டும் களமிறங்கினார். பவுன்சியான பெர்த் மைதானத்தில் ஜோஷ் ஹேசில்வுட்டின் பந்துவீச்சில் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். பின்னர் கோலி மூன்றாவது இடத்தில் வந்தார், 224 நாட்களுக்குப் பிறகு ஒரு சர்வதேச போட்டியில் விளையாடினார். எட்டு பந்துகளை எதிர்கொண்ட பிறகு கோலி ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
ரோஹித் மற்றும் கோலி பற்றி சுனில் கவாஸ்கர் என்ன சொன்னார்?
பெர்த்தில் விரைவில் ஆட்டமிழந்த போதிலும்,ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சுனில் கவாஸ்கரிடமிருந்து ஆதரவைப் பெற்றனர். இருவர் பற்றியும் பேசிய அவர், "அவர்கள் ஆஸ்திரேலியாவின் மிகவும் பவுன்சியான ஆடுகளங்களில் விளையாடினர். இது எளிதானது அல்ல, குறிப்பாக பல மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களுக்கு கடினமாக இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வரும் ஷுப்மான் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கும் இது சவாலானது" என்றார்.
"இந்திய அணி இன்னும் சிறப்பாக உள்ளது, அவர்கள் சாம்பியன்ஸ் டிராபியை வென்றனர். அடுத்த இரண்டு போட்டிகளில் ரோஹித் மற்றும் கோலி பெரிய ஸ்கோர் செய்தால் ஆச்சரியப்பட வேண்டாம். சில மாதங்களுக்குப் பிறகு அவர்கள் திரும்பி வருகிறார்கள். அவர்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறார்களோ, அவ்வளவு நேரம் வலைப்பயிற்சிகளில் செலவிடுவாரள்கள், மேலும் அவர்களுக்கு அதிக த்ரோடவுன்கள் கிடைக்கின்றன, இதனால் ரிசர்வ் பவுலர்கள் 20 யார்டு தூரத்தில் இருந்து பந்து வீசுகிறார்கள், விரைவில் அவர்கள் தங்கள் ரிதமிற்கு திரும்புவார்கள். அவர்கள் ரன்கள் எடுக்கத் தொடங்கியதும், டீம் இந்தியாவின் மொத்த ஸ்கோர் 300, 300 ஐ விட அதிகமாக இருக்கும்" என்று கவாஸ்கர் மேலும் கூறினார்.
அடிலெய்டில் கோலி:
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 23, வியாழக்கிழமை அடிலெய்டில் நடைபெற உள்ளது இந்த மைதானத்தில் விளையாடிய நான்கு ஒருநாள் இன்னிங்ஸ்களில் 83.84 ஸ்ட்ரைக் ரேட்டில் 244 ரன்கள் எடுத்து கோலி எடுத்துள்ளார், மேலும் இந்த மைதானத்தில் அவர் இரண்டு சதங்களை அடித்துள்ளார், அவரது அதிகபட்ச ஸ்கோர் 107 ஆகும்.
அடிலெய்டில் விளையாடிய ஆறு ஒருநாள் இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா மொத்தம் 131 ரன்கள் எடுத்துள்ளார், அவரது அதிகபட்ச ஸ்கோர் 43 ஆகும். இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை.





















