Steve Smith: சர்வதேச அளவில் அதிவேக 15 ஆயிரம்.. டெஸ்ட்டில் அதிவேக 9 ஆயிரம்.. சாதனையை குவிக்கும் ஸ்டீவ் ஸ்மித்!
அதிவேகமாக 15 ரன்களை கடந்த 7வது வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.
ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் இன்னிங்ஸ்களில் 149 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ள ஸ்டீவ் ஸ்மித் சிறப்பான ரெக்கார்ட் ஒன்றை தனது பெயரில் பதிவு செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் பட்டியலில் ஸ்மித் இடம் பிடித்தார்.
4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்மித், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 149 பந்துகளில் 10 பவுண்டரிகள் உதவியுடன் 85 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், அதிவேகமாக 15 ரன்களை கடந்த 7வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும், ஹசிம் ஆம்லா இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 333 இன்னிங்ஸ்களில் 15 ஆயிரம் சர்வதேச ரன்களை கடந்திருந்தார். முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் ஹசிம் ஆம்லா 336 இன்னிங்ஸ்களிலும், விவ் ரிச்சர்ட்ஸ் 344 இன்னிங்ஸ்களிலும் கடந்திருந்தனர். ஆஸ்திரேலிய வீரர் ஹேடன் 347 இன்னிங்ஸ்களிலும், வில்லியம்சன் 348 இன்னிங்ஸ்களிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர். 350 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு ஜோ ரூட் இந்த சாதனையைப் படைத்துள்ளார். அதேசமயம் ஸ்டீவ் ஸ்மித் 351 இன்னிங்சில் 15 ஆயிரம் ரன்களை கடந்தார்.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில் டேவிட் வார்னர் 66 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் தர, உஸ்மான் கவாஜா 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷென் 47 ரன்களும், டிராவிஸ் ஹெட் 73 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ரன்களை கடந்த வீரர் -
- விராட் கோலி - 333 இன்னிங்ஸ்
- ஹசிம் ஆம்லா - 336 இன்னிங்ஸ்
- விவ் ரிச்சர்ட்ஸ் - 344 இன்னிங்ஸ்
- மேத்யூ ஹைடன் - 347 இன்னிங்ஸ்
- கேன் வில்லியம்சன் - 348 இன்னிங்ஸ்
- ஜோ ரூட் - 350 இன்னிங்ஸ்
- ஸ்டீவ் ஸ்மித் - 351* இன்னிங்ஸ்
மேலும் ஒரு சாதனை:
ஸ்டீவ் ஸ்மித் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை எட்டியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ரன்களை கடந்த உலகின் இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். 174வது இன்னிங்சில் தான் ஸ்மித் இந்த சாதனையை செய்தார்.
Fewest innings to 9000 Test Runs
— Cricbaba (@thecricbaba) June 28, 2023
172 - K Sangakkara
174 - Steve Smith*
176 - Rahul Dravid
177 - Brian Lara
177 - Ricky Ponting #SteveSmith | #TheAshes
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ரன்களைக் கடந்த பேட்ஸ்மேன்
- குமார் சங்கக்கார - 172
- ஸ்டீவ் ஸ்மித் - 174
- ராகுல் டிராவிட் - 176
- பிரையன் லாரா - 177
- ரிக்கி பாண்டிங் - 177
ஸ்டீவ் ஸ்மித் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 99வது போட்டியில் விளையாடி வருகிறார். இதுவரை 59.65 சராசரியில் 9007 ரன்கள் எடுத்துள்ளார். இதன் போது, 31 சதங்கள், 4 இரட்டை சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் அடித்துள்ளார். டெஸ்ட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 239 ரன்களாகும்.