Watch Video: இது என்ன ஷாட்! ரஷீத்கான் அடிச்ச சிக்ஸால் மிரண்டு போன மிட்செல் ஸ்டார்க்!
ODI WC 2023: ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கான் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
![Watch Video: இது என்ன ஷாட்! ரஷீத்கான் அடிச்ச சிக்ஸால் மிரண்டு போன மிட்செல் ஸ்டார்க்! Shot of the Day Rashid Khan's unbelievable pull shot against Mitchell Starc - AUS vs AFG ODI World Cup 2023 Watch Video: இது என்ன ஷாட்! ரஷீத்கான் அடிச்ச சிக்ஸால் மிரண்டு போன மிட்செல் ஸ்டார்க்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/07/42ff17f9d8f5de8a68b96b76eac1fbc01699370893711102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மும்பையில் ஆடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி ஆடியது.
இந்த போட்டியில் தொடக்க வீரர் ஜட்ரான் அபாரமாக ஆடினார். மற்ற வீரர்கள் ஓரளவு சிறப்பாக ஆட 5வது விக்கெட்டாக முன்னாள் கேப்டன் நபி அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு 45.4வது பந்தில் 6வது விக்கெட்டுக்கு ஆல்ரவுண்டர் ரஷீத்கான் அபாரமாக ஆடினார்.
233 ரன்களின்போது களமிறங்கிய ரஷீத்கான் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். இதனால், 250 ரன்களை கடக்குமா என்ற நிலையில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி ரன்களை குவிக்கத் தொடங்கியது.
உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கின் கடைசி ஓவரின் 5வது பந்தில் ரஷீத்கான் வீசிய சிக்ஸர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ரஷீத்கான் தலைக்கு மேலே சென்ற அந்த பந்தை யாருமே எதிர்பார்க்காத வகையில் அவர் ஒரு ஷாட் ஆடினார். அந்த பந்து ரசிகர்கள் கூட்டத்தின் நடுவே சென்று விழுந்தது. இந்த சிக்ஸரை கண்ட ஆஸ்திரேலிய அணியே ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தது என்றே சொல்லலாம்.
View this post on Instagram
தற்போது இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் ஜட்ரானின் அபாரசதம், ரஷீத்கானின் அதிரடி பேட்டிங்கால் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்தது. ஸ்டார்க் 9 ஓவர்கள் மட்டுமே வீசி 70 ரன்களை வாரி வழங்கினார். தற்போது, இலக்கை நோக்கி ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)