மேலும் அறிய

IND vs AFG: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20யில் சரித்திரம் படைப்பாரா ரோஹித் சர்மா? கோலி சாதனையை முறியடிக்க வாய்ப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 44 ரன்கள் எடுத்தால், ரோஹித் சர்மா விராட் கோலியின் முக்கியமான சாதனையை முறியடிக்க முடியும்.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நாளை அதாவது வியாழக்கிழமை முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலியில் ஜனவரி 11ம் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைக்க இருக்கிறார். தற்போது இந்த சாதனை முன்னாள் கேப்டன் விராட் கோலி பெயரில் உள்ளது. 

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும். இந்த தொடரில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குபிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 அணிக்கு திரும்பியுள்ளனர். காயம் காரணமாக டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் இடம்பெறவில்லை. 

ரோஹித் சர்மா இன்னும் 44 ரன்கள் எடுத்தால்..?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 44 ரன்கள் எடுத்தால், ரோஹித் சர்மா விராட் கோலியின் முக்கியமான சாதனையை முறியடிக்க முடியும். சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனை தற்போது விராட் கோலியின் பெயரில் உள்ளது. கோலி இந்திய அணியின் கேப்டனாக இதுவரை 50 போட்டிகளில் 1570 ரன்கள் எடுத்துள்ளார். அதேநேரத்தில் தற்போதைய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 51 போட்டிகளில் 1527 ரன்கள் எடுத்துள்ளார். அப்படிப்பட்ட நிலையில், முதல் டி20யில் ரோஹித் 44 ரன்கள் எடுத்தால், சர்வதேச டி20யில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.  

ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் நம்பர்-1:

சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது நான்காவது இடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோஹித் 44 ரன்கள் எடுத்தால், கோலியை பின்னுக்கு தள்ளிவிட்டு நான்காவது இடத்திற்கு வருவார். இந்த சாதனை பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் முதலிடத்தில் உள்ளார். ஃபின்ச் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக 2236 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சாதனைப் பட்டியலில் பாபர் அசாம் 2195 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் பெயரில் 2042 ரன்கள் உள்ளது.  

எம்.எஸ். தோனி சாதனையை சமன் செய்ய வாய்ப்பு:

ரோஹித் சர்மா 51 போட்டிகளில் 39 வெற்றிகளைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில் எம்எஸ் தோனி 72 போட்டிகளில் 42 வெற்றிகளைப் பெற்று டி20 போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளார். வரவிருக்கும் T20I தொடரில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை ஸ்வீப் செய்தால், ஆண்களுக்கான T20I போட்டிகளில் அதிக வெற்றிகரமான இந்திய கேப்டனாக தோனியை ரோஹித் சமன் செய்வார்.

இந்திய அணிக்கு அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர்கள்:

எம்.எஸ். தோனி
2007-2016 72 41 28 1 0
ரோஹித் சர்மா
2017-2022 51 39 12 0 0
விராட் கோலி
2017-2021 50 30 16 2 0
ஹர்திக் பாண்டியா
2022-2023 16 10 5 1 0
சூர்யகுமார் யாதவ்
2023-2023 7 5 2 0 0
ரிஷப் பண்ட்
2022-2022 5 2 2 0 0
ஷிகர் தவான்
2021-2021 3 1 2 0 0
ருதுராஜ் கெய்க்வாட் 2023-2023 3 2 0 0 0
சுரேஷ் ரெய்னா
2010-2011 3 3 0 0 0
ஜஸ்பிரித் பும்ரா
2023-2023 2 2 0 0 0

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Embed widget