Rishabh Pant Car Accident: நான் தூங்கிவிட்டேன், கார் டிவைடரில் மோதியது.. உயிர் பிழைத்த ரிஷப் பண்ட் சொன்னது இதுதான்!
தீவிர சிகிச்சைக்கு பிறகு கண் முழித்த ரிஷப் பண்ட், இந்த விபத்து எப்படி நடந்தது என்று காவல்துறையிடம் தகவல் தெரிவித்தார்.
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரிஷப் பண்ட் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த விபத்தானது உத்தரகாண்ட் அடுத்த ரூர்க்கியின் குருகுல் நர்சன் பகுதியில் இன்று காலை நடந்தது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உடனடியாக விபத்தில் சிக்கிய பண்ட்யை மீட்டு, 108 க்கு போன் செய்து பாண்டியை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது ரிஷப் பண்ட், பாண்டியை மருத்துவனையில் இருந்து டேராடூன் மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து எப்படி நடந்தது, எங்கு நடந்தது? எப்படி உயிர் பிழைத்தேன் என்று ரிஷப் பண்ட் கூறினார். பண்ட் மட்டும் காரிலிருந்து இறங்க சிறிது நேரம் ஆகியிருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். ஏனெனில் இந்த சம்பவத்திற்கு பிறகு காரில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, முற்றிலும் கார் எரிந்து போனது.
தீவிர சிகிச்சைக்கு பிறகு கண் முழித்த ரிஷப் பண்ட், இந்த விபத்து எப்படி நடந்தது என்று காவல்துறையிடம் தெரிவித்தார். அதில், ”நான் தான் காரை ஓட்டி வந்தேன். வாகனம் ஓட்டும்போது எதிர்பாராத விதமாக கண் அசந்துவிட்டேன். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து கண் இமைக்கும் நேரத்தில் சாலையோரம் உள்ள டிவைடரில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. விபத்துக்கு பிறகு, காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வந்தேன். நான் வெளியே வந்த சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிந்தது” என தெரிவித்தார்.
ரிஷப் பண்ட் காயம்:
ரிஷப் பண்ட்டின் உடலில் கடுமையான காயங்கள் எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு தலையில் காயம் காயமும், வலது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள காயங்கள் குறித்து விசாரணைக்கு பிறகே முழுவிவரம் தெரியவரும்.
NCA- க்கு அறிக்கை அளிக்க சொன்ன பிசிசிஐ:
ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கிய பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. தொடர்ந்து, பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் வெளியாகின. இந்தநிலையில், விபத்துக்குள்ளான பண்ட், உடல்நலம் குறித்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அறிக்கை அளிக்கமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டது.
கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்து சிசிடிவி காட்சிகள்... pic.twitter.com/RUtUmcO60n
— Sridharan K (@reportersridhar) December 30, 2022
This video is told to be of Rishabh Pant's recent accident in Uttarakhand. Vehicle can be seen on fire and Pant is lying on the ground. @TheLallantop pic.twitter.com/mK8QbD2EIq
— Siddhant Mohan (@Siddhantmt) December 30, 2022
இந்தநிலையில், ரிஷப் பண்ட் கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சியும், கார் தீப்பற்றி எரியும் வீடியோக் காட்சியும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.