Ravichandran Ashwin:டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்; நாதன் லியோனை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்
சர்வதேச டெஸ்ட் கிரிகெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது வீரர் என்ற பெருமையை நாதன் லியோனை பின்னுக்குத் தள்ளி பெற்றிருக்கிறார் அஸ்வின்.
சர்வதேச டெஸ்ட் கிரிகெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது வீரர் என்ற பெருமையை நாதன் லியோனை பின்னுக்குத் தள்ளி பெற்றிருக்கிறார் அஸ்வின்.
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இதில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இச்சூழலில் இன்று (அக்டோபர் 24) புனேவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
இதில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் மீண்டும் ஒரு வலராற்று சாதனையை செய்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 531 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணி வீரர் நாதன் லியோன் சாதனைனை அஸ்வின் முறியடித்துள்ளார்.
அதேபோல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 189 விக்கெட்கள் வீழ்த்தி இமாலய சாதனையை படைத்து இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோனை முந்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.
Ravi Ashwin surpasses Nathan Lyon in the leading wicket taker list. pic.twitter.com/2vtQneHIjN
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 24, 2024
கடந்த 2019 முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் 43 போட்டிகளில் 78 இன்னிங்ஸ்களில் பந்து வீசி 187 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருந்தார்.
இச்சூழலில் தான் அஸ்வின் அவருடை சாதனையை முறியடித்துள்ளார். அந்தவகையில் அஸ்வின் 39 போட்டிகளில் 74 இன்னிங்ஸ்களில் விளையாடி 189 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்டில் அதிக விக்கெட்டுகள்
- முத்தையா முரளிதரன் (இலங்கை) – 800
- ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா) – 708
- ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) – 704
- அனில் கும்ப்ளே (இந்தியா) – 619
- ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) – 604
- க்ளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா) – 563
- ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) – 531*
- நாதன் லியோன் (ஆஸ்திரேலியா) – 530