TNPL 2023: கெத்துக்காட்டிய கோவை.. வெற்றியை தக்க வைத்த திண்டுக்கல்.. நேற்றைய டிஎன்பிஎல் மேட்ச் ஹைலைட்ஸ்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) 11வது போட்டியில் ரவிசந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை 1 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) 11வது போட்டியில் ரவிசந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை 1 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இரு அணிகள் மோதிய போட்டி திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 63 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், அதன்பின் ஆதித்ய கணேஷ் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 44 ரன்களையும், ஷரத்குமார் 21 பந்துகளில் 25 ரன்களையும் எடுத்திருந்தனர். இது தவிர, சுபோத் பாடி 13 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது.
திண்டுக்கல் அணியில் அதிகபட்சமாக ஆதித்யா கணேஷ் 44 ரன்களும், சுபோத் பாட்டி 31 ரன்களும் எடுத்திருந்தனர்.
இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்கத்திலேயே 15 ரன்களுக்குள் 2 விக்கெட்கள் விழ, அதன் பிறகு பாபா அபராஜித் சிறப்பாக ஆடி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நம்பிக்கையை கொடுத்தார்.
திண்டுக்கல் டிராகன்ஸின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி பாபா அபராஜித்தை 74 ரன்களில் வீழ்த்த, சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
மற்றொரு போட்டி:
திண்டுக்கல் என்பிஆர் ஸ்டிடேயத்தில் நேற்று இரவு பால்ஸி திருச்சி அணிக்கும், லைக்கா கோவை கிங்ஸ் அணிக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில், முதலில் டாஸ் வெற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.
திருச்சி அணியில் அதிகபட்சமாக கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ 58 ரன்களும், ராஜ்குமார் 31 ரன்களும் எடுத்திருந்தனர். 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை அணி 18.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க வீரராக உள்ளே வந்த சுஜாய் 72 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.