INDvsIRE 1ST T20: குறுக்கே வந்த கௌசிக்.. மழையால் தடைபட்டது முதலாவது டி20.. இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு..!
இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக தடைபட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
அயர்லாந்து அணிக்கு எதிராக டப்ளினில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 140 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் பந்துவீச்சில் தொடக்கத்தை விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் காம்பெர் – மெக்கர்த்தி அதிரடியால் அந்த அணி 139 ரன்களை எட்டியது. இதையடுத்து, 140 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.
அடுத்தடுத்து விக்கெட்:
முதல் ஓவரிலே ஜெய்ஸ்வால் பவுண்டரிகளை விரட்டினாலும் அடுத்தடுத்த ஓவர்களை அயர்லாந்து சிக்கனமாக வீசியது. இதனால், இருவரும் நிதானமாக ஆடினர். ரன் ஓடுவதில் ஏற்பட்ட குழப்பத்தால் இவர்களில் ஒருவரை அவுட்டாக்கும் பொன்னான வாய்ப்பை அயர்லாந்து வீரர்கள் தவறவிட்டனர்.
முதல் 4 ஓவர்களில் நிதானம் காட்டிய இந்த ஜோடி 5வது ஓவரில் இருந்து அதிரடிக்கு மாறியது. ஜெய்ஸ்வாலும், ருதுராஜ் கெய்க்வாட்டும் ரன்களை துரிதமாக சேர்க்கத் தொடங்கினர். இதனால், மைதானத்தில் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறக்கத் தொடங்கியது. ஆனால், கிரெக் யங் வீசிய 7வது ஓவரில் அதிரடிக்கு மாறிய ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, ஒன் டவுன் வீரராக களமிறங்கிய திலக் வர்மா முதல் பந்திலே அவுட்டானார். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குறுக்கிட்ட மழை - இந்தியா வெற்றி பெறுமா?
சஞ்சு சாம்சன் – ருதுராஜ் ஜோடி சேர்ந்த நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தற்காலிகமாக தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி 6.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்துள்ளது. இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இந்திய அணி டக்வொர்த் லீவிசுக்கு ஆட்டம் சென்றாலும், இந்திய அணி ரன்ரேட் விகிதப்படி தற்போது எடுக்க வேண்டிய ரன்னை விட 2 ரன்கள் கூடுதலாக இருக்கிறது. இதனால், ஆட்டம் தொடராவிட்டாலும் இந்தியாவே வெற்றி பெறும்.
மேலும் படிக்க: IND vs IRE 1st T20: சொதப்பிய தொடக்கம்.. அசத்திய மெக்கர்த்தி.. இந்தியாவுக்கு 140 ரன்கள் டார்கெட்..!
மேலும் படிக்க: IND Vs IRE 1st T20: களமிறங்கினார் ரிங்குசிங்... இந்தியா முதலில் பவுலிங்..! ஆதிக்கம் செலுத்துமா அயர்லாந்து?