மேலும் அறிய

Rinku Singh: இடது கை தோனி.. ரிங்கு சிங்கை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்! விவரம் இதோ!

ரிங்கு சிங்கை இடது கை தோனி என்று அழைக்கலாம் என்று இந்திய அணி வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்:

இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் நடந்து முடிந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினார். அதிலும் ஃபினிஷிங் செய்வதில் வல்லவராக திகழ்கிறார். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஃபினிஷிங்கை வெளிப்படுத்திய இவர் சர்வதேச போட்டிகளிலும் அதேபோல் விளையாடி வருகிறார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் 9 பந்துகள் களத்தில் நின்று 2 பவுண்டரிகள் எடுத்து 16 ரன்கள் எடுத்தார். அதேபோல், இரண்டாவது போட்டியில் 9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தார். கடைசி போட்டியில் 39 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் 6 சிக்சர்களை விளாசினார். அந்த போட்டியில் 69 ரன்களை குவித்தார். இந்நிலையில்தான் ரிங்கு சிங்கை இடது கை தோனி என்று அஸ்வின் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

இடது கை தோனி:

இது தொடர்பாக பேசிய அவர், “ரிங்கு சிங்கை இடது கை தோனி என்று அழைக்கலாம். தோனி மிகப் பெரிய ஆள். இவ்வளவு ஆரம்பத்திலே ரிங்கு சிங்கை தோனியுடன் ஒப்பிட முடியாது. ஆனால், அவரது அமைதியான ஆட்டத்தைப் பற்றி நான் பேசுகிறேன்.  அவர் தொடர்ந்து உத்தரபிரதேச அணிக்காக ஏரளமான ரன்களை குவித்து இந்திய அணிக்குள் நுழைந்துள்ளார். ரிங்கு சிங் பல ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பெஞ்சில் இருந்தார். 

அவர் கே.கே.ஆரில் இருந்தபோது, பயிற்சியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், த்ரோடவுன்களில் அடித்த அனைத்து பந்துகளையும் சேகரித்து, பந்து வீச்சாளரிடம் திருப்பிக் கொடுத்தார் என்று பலரும் என்னிடம் கூறுவார்கள். அப்போதிருந்து, அவர் நீண்ட காலமாக கே.கே.ஆருடன் இருந்தார். உ.பி அணிக்காக கடின உழைப்பில் ஈடுபட்டார். தந்திரமான சூழ்நிலையிலிருந்து இந்திய அணிக்கு வருவதற்கு அல்லது ஒரு இன்னிங்ஸை முடிக்க அவர் எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதைக் காட்டினார்.

அணி முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது சேசிங் செய்தாலும் அவரது அமைதி மாறாது. இன்னிங்ஸின் கடைசி கட்டத்தில் அவரது அமைதியானது அணிக்கு போனஸ்” என்று பேசியுள்ளார் அஸ்வின்.

இதனிடையே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ரிங்கு சிங்குவிற்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: IND vs ENG: "இந்திய மைதானத்தை குறை சொல்ல மாட்டோம்! ஏன் தெரியுமா?" இங்கிலாந்து துணை கேப்டன் விளக்கம்

மேலும் படிக்க: KL Rahul: இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார்! பிசிசிஐ அறிவிப்பு!

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

IND vs NZ: சம்பவம் செய்த நிகோல்ஸ்.. சாத்தி எடுத்த பிலிப்ஸ்.. கம்பேக் கொடுத்த நியூசிலாந்து! முதல் டெஸ்டின் முதல் நாள் எப்படி?
IND vs NZ: சம்பவம் செய்த நிகோல்ஸ்.. சாத்தி எடுத்த பிலிப்ஸ்.. கம்பேக் கொடுத்த நியூசிலாந்து! முதல் டெஸ்டின் முதல் நாள் எப்படி?
"செமத்தியான ப்ளேயர்யா.." பெஞ்சில் உட்காரவைக்கப்பட்ட சிராஜ், ஜடேஜா! கம்பீர், கில்லை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
IND vs NZ 1st Test: சம்.. சம்.. சம்பவம் செய்யும் பும்ரா.. தடுமாறும் நியூசிலாந்து! முதல் டெஸ்டில் இந்தியா மிரட்டல்!
IND vs NZ 1st Test: சம்.. சம்.. சம்பவம் செய்யும் பும்ரா.. தடுமாறும் நியூசிலாந்து! முதல் டெஸ்டில் இந்தியா மிரட்டல்!
MS Dhoni: ஒரு ஃபேர்வெல் மேட்ச் கூட இல்லயே... ஆதங்கப்படும் தோனி ரசிகர்கள்! தல போல வருமா?
MS Dhoni: ஒரு ஃபேர்வெல் மேட்ச் கூட இல்லயே... ஆதங்கப்படும் தோனி ரசிகர்கள்! தல போல வருமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
BMW R 12 G/S: ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
Moorthy Raid: கலக்கத்தில் திமுக..! முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு - குவாரி விதிமீறல் வழக்கு
கலக்கத்தில் திமுக..! முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு - குவாரி விதிமீறல் வழக்கு
Kolathur: கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலினா? புது ரூட்டில் உதயநிதி திமுக? ஆளும் தவெகவில் தணிகா Vs சதிஷ்குமார்?
கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலினா? புது ரூட்டில் உதயநிதி திமுக? ஆளும் தவெகவில் தணிகா Vs சதிஷ்குமார்?
VS Babu: வழக்கு போட்ட அடுத்த நாளே மரணம்! கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உயிரிழப்பில் சதி? போலீசில் பகீர் புகார்!
VS Babu: வழக்கு போட்ட அடுத்த நாளே மரணம்! கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உயிரிழப்பில் சதி? போலீசில் பகீர் புகார்!
Embed widget