மேலும் அறிய

பிரபாகரன் மகள் வீடியோ விவகாரம்; நம்பிக்கையே இல்லை - திருமாவளவன் பேட்டி

பிரபாகரன் மனைவி மற்றும் மகள் உயிருடன் இருப்பதாக வெளியாகும் தகவல்களில் தனக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உள்பட உலகின் தமிழர்கள் வாழும் பல பகுதிகளில் இன்று மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்ட நிலையில், எல்.டி.டி.இ. அமைப்பின் தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா என்று கூறி இளம்பெண் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபாகரன் மகள் வீடியோ:

இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. பலர் இந்த வீடியோவில் இருப்பது பிரபாகரனின் மகள் துவாரகா என்றும், சிலர் இது துவாரகா இல்லை என்றும், சிலர் இது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வீடியோ குறித்து இன்று காலை வி.சி.க. தலைவர் திருமாவளவனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். நிருபர்கள் பிரபாகரன் மகள் பேசும் வீடியோ மாலை வெளியாக உள்ளதாகவும், அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டனர்.

தோன்றினால் மகிழ்ச்சி:

அதற்கு திருமாவளவன் பதிலளித்து கூறியதாவது, இப்படிப்பட்ட தகவல்களில் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படி அவர் வெளிப்படையாக தோன்றினால் நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், தொடர்ந்து அவ்வப்போது இதுபோன்ற வதந்திகள் வெளிவருவது வேதனை அளிக்கிறது. இன்று மாவீரர் நாள். மேதகு பிரபாகரன் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் உரையாற்றுவார். உலக நாடுகள் அவர் என்ன சொல்கிறார் என்பதை எதிர்நோக்கி இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நம்பிக்கையே இல்லை:

மேலும், அவரிடம் பிரபாகரன் மனைவி, மகள் குடும்பத்தினர் உயிருடன் இருப்பதாகவும், அவர்கள்  இயக்குனர் கவுதமனிடம் பேசி அதை உறுதிப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த திருமாவளவன் எனக்கு அதில் நம்பிக்கையே இல்லை. அவர்கள் உயிரோடு இருந்தால் அது மகிழ்ச்சிக்குரியது. அவர்கள் வௌிச்சத்திற்கு வரும்போது அதை ஏற்போம். இப்போது துளியளவில் கூட நம்பிக்கை இல்லை என்று கூறினார்.

பிரபாகரன் மகள் துவாரகா பேசியதாக வெளியான வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பிரபாகரன் மகள் துவாரகா பேசியதாக வெளியான வீடியோவால் பரபரப்பு..

மேலும் படிக்க: TN Rain Alert: சீக்கிரமா வீட்டுக்குப் போங்க.. மழை கொட்டித் தீர்க்கப்போகுது; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தலைப்பு செய்திகள்

Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget