கணுக்காலில் ஏற்பட்ட காயம்:


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கணுக்கால் காயம் காரணமாக விளையாடவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்ற வீரர் முகமது ஷமி. அந்தவகையில் இவர் விளையாடிய ஒவ்வொரு போட்டிகளிலும் எதிரணியினரின் பேட்ஸ்மேன்களை மிரட்டினார் என்றே சொல்ல வேண்டும். அதன்படி ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட காயத்தால் முகமது ஷமிக்கு கிடைத்த வாய்ப்பை கொண்டு தான் விளையாடிய  7 போட்டிகளில் 24 விக்கெட்களை எடுத்து அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். முக்கியமாக  3 போட்டிகளில் 5+ விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.


வெற்றிகரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை:


நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவினார். அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி இருந்தார் ஷமி. அதன்பின் இடது கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்றுவந்தார்.  இதனிடையே கடந்த மாதம் லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றதன் அடிப்படையில் அதன் பின்னர் அவர் சிறிது தூரம் ஓட முடிந்தது என்று தகவல் வெளியானது. ஆனால் மீண்டும் அவரது காயம் கவலைக்குரிய வகையில் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறினார். இச்சூழலில் தான் முகமது ஷமிக்கு இன்று (பிப்ரவரி 27) அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது, 





இது தொடர்பான புகைப்படங்களை அவருடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்


விரைவில் குணமடைய வாழ்த்திய மோடி:






இந்நிலையில் முகமது ஷமி விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன், முகமது ஷமி! உங்களுக்கு மிகவும் தேவையான தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!


 


மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!