இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இரண்டாவது செஷன் ஆட்டத்தின் போது, ​​காயம் காரணமாக ரிஷப் பந்த் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

ரிஷப் பண்ட் காயம்:

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாளில், இரண்டாவது செஷனின் போது இடது கையில் அடிபட்டதால் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மைதானத்தை விட்டு வெளியேறினார். இன்னிங்ஸின் 34வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா வீசிய லெக் சைடில் பந்து வீசியதை நிறுத்த பந்த் தனது இடது பக்கத்தில் டைவ் அடித்த போது அவரது கையில் காயம் ஏற்ப்பட்டது.  இதனால் அந்த ஓவர் முடிந்தவுடன் பண்ட் டிரஸ்சிங் ரூம் சென்றார். காயமடைந்த ரிஷப் பண்ட் பதிலாக துருவ் ஜூரல் தற்போது கீப்பிங் செய்து வருகிறார்.  ரிஷப் பண்ட்டுக்கு ஏற்ப்பட்ட காயத்தின் அளவு என்ன என்பது குறித்து இதுவரை வெளிவரவில்லை. 

 டாஸ் வென்ற இங்கிலாந்து

லார்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இங்கிலாந்து அணியின் பிளேயிங் 11- ல் ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஜோஷ் டங்குக்கு பதிலாக ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து நிதான ஆட்டம்:

பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி மற்றும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் ஜோ ரூட் மற்றும் ஒல்லி போப் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு 109 ரன்களை சேர்த்தனர். போப் 44 ரன்களுக்கு ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஹாரி புரூக்கும் 11 ரன்னும் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

தற்போது இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 185  ரன்களை எடுத்து விளையாடி வருகிறது, ரூட் 65 ரன்களுடனும் ஸ்டோக்ஸ் 10 ரன்னுடன் விளையாடி வருகின்றனர்.