நான்காவது டெஸ்ட் போட்டி:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஹெல்மெட் அணியாமல் நின்ற சர்பராஸ் கான்:
இந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 307 ரன்களை எடுத்தது. பின்னர் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி. அந்த வகையில் மூன்றாவது நாளான இன்று இந்திய அணிக்காக பார்வேட் நின்ற சர்பராஸ் கான் ஹெல்மெட் அணியாமல் நின்றர்
🔊 Hear this! Rohit does not want Sarfaraz to be a hero?🤔#INDvsENG #IDFCFirstBankTestSeries #BazBowled #JioCinemaSports pic.twitter.com/ZtIsnEZM67
— JioCinema (@JioCinema) February 25, 2024
class="s1">.
இதனை பார்த்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ‘’ஏய், இங்கே ஹீரோவாக வேண்டாம்” என்று கூறினார். உடனே பாதுகாப்பு இன்றி பேட்ஸ்மேன் அருகில் ஹெல்மெட் அணியாமல் நின்றதை உணர்ந்த சர்பராஸ் கான் கேப்டன் ரோகித் சர்மா சொன்னதை சுதாரித்து கொண்டார். அப்போது மைதனத்தில் இருந்த ஊழியர் ஒருவர் ஹெல்மெட் ஒன்றை கொண்டு வந்து கொடுத்தார். பின்னர் ஹெல்மெட் அணிந்து கொண்டு பீல்டிங் செய்தார் சர்பராஸ் கான்.
தற்போது இது தொடர்பான வீடியோ காட்சி தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே ரோகித் சர்மா மைதானத்தில் குறும்புத்தனமாக செயல்படுகிறார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதன்படி, மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டு விட்டது என்று நினைத்து களத்தில் இருந்த ஜெய்ஸ்வால் மற்றும் சர்பராஸ் கான் பெவிலியனுக்கு திரும்ப, அதை பார்த்த கேப்டன் ரோகித் சர்மா அவர்களை மீண்டும் பேட்டிங் செய்ய அறிவுறித்தினார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs ENG: 10 விக்கெட்டுகளையும் அள்ளிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள்! இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் சாதனை!
மேலும் படிக்க: Dhruv Jurel: கார்கில் போர் வீரரான தந்தைக்கு பிக் சல்யூட் - துருவ் ஜூரல் பின்னணி தெரியுமா?