Ind vs Pak: இந்தியா-பாக் போட்டி ரத்து? உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு.. முழு விவரம்
Ind vs Pak Asia Cup 2025: இந்தியா-பாகிஸ்தான் ஆசியக்கோப்பை போட்டியை ரத்து செய்யக் கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக்கோப்பை போட்டியை ரத்து செய்ய வேண்டுமென டெல்லி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை தொடர்:
ஆசியக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இதில் வரும் 14 ஆம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இரு அணிகளும் முதல் முறையாக மோதவுள்ளது.
போட்டியை ரத்து செய்ய வேண்டும்:
இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்யக் கோரி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நான்கு சட்ட மாணவர்கள் தாக்கல் செய்துள்ளனர், மேலும் இந்த குழுவிற்கு ஊர்வசி ஜெயின் தலைமை தாங்குகிறார். டி20 ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் (இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை) போட்டி செப்டம்பர் 14 அன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது
பஹல்காம் தாக்குதல்:
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றிற்குப் பிறகு பாகிஸ்தானுடன் போட்டியை விளையாடுவது நாட்டின் கண்ணியத்திற்கு அவமானம் என்றும், இந்திய வீரர்கள் மற்றும் மக்களின் தியாகங்களை அவமதிப்பதாகவும் வழக்கறிஞர்கள் சினேகா ராணி, அபிஷேக் வர்மா மற்றும் முகமது அனஸ் சவுத்ரி வாதிட்டனர் .
"தேசிய நலன், குடிமக்களின் உயிர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் தியாகங்களை விட கிரிக்கெட்டை மேலே வைக்க முடியாது" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற முடிவுகளை ஒழுங்குபடுத்த தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம் 2025 ஐ விரைவில் அமல்படுத்தவும் அவர்கள் வழிகாட்டுதல்களைக் கோரியுள்ளனர்.
இந்தியா பாக் போட்டி
இந்தியா-பாகிஸ்தான் போட்டி கிரிக்கெட்டில் மிகவும் பரபரப்பான போட்டியாக பார்க்கபடுகிறது இது ஆசிய கோப்பை அட்டவணை வெளியிடப்படுவதற்கு பேசு பொருளாக இருந்து வருகிறது.ஆனால் சமீபத்தில் இந்திய அரசாங்கம் ஒரு புதிய கொள்கையை அமல்படுத்தியது, அதில் இந்திய அணி எந்தவொரு பலதரப்பு போட்டியிலும் பாகிஸ்தானுடன் விளையாட அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் பாகிஸ்தானுடன் எந்த இருதரப்பு தொடரிலும் இந்திய அணி விளையாடாது என்றும் கூறப்பட்டது.
2025 ஆசிய கோப்பையின் முதல் போட்டியில், இந்திய அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சிவம் துபே மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..



















