PAK vs NZ Semi-final LIVE: இறுதிப்போட்டியை எட்டிய பாகிஸ்தான்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!
Pakistan vs New Zealand Score Live Updates: இதுவரை பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் 20 ஓவர் கிரிக்கெட்டில் 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

Background
Pakistan vs New Zealand Score Live Updates:
எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகிறது. நவம்பர் 10ம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் சந்திக்கிறது. முதலாவது அரையிறுதி சிட்னி மைதானத்திலும், இரண்டாவது அரையிறுதி அடிலெய்டு மைதானத்திலும் நடைபெறுகிறது.
இன்றைய ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.
இதுவரை 20 ஓவர் உலகக் கோப்பையை வெல்லாத நியூசிலாந்து அணிக்கு இந்த ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.
சூப்பர் 12 சுற்று ஆட்டங்களில் தொடக்கத்தில் சில ஆட்டங்களில் மோசமான ஆட்டத்திறனுடன் கேன் வில்லியம்சன் இருந்தார். எனினும், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 35 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஃபார்முக்குத் திரும்பினார்.
6 முறை அரையிறுதியில் பாகிஸ்தான் அணி 2009இல் சாம்பியன் ஆனது. இதுவரை 6 முறை பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த முறை மீண்டும் சாம்பியன் ஆக வேண்டும் என்ற முனைப்புடன் அந்த அணி விளையாடும். பாகிஸ்தானுக்கு பலமே பந்துவீச்சு தான். சுழற்பந்து வீச்சாளர் ஷதப் கான், வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், முகமது வாசிம் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.
இதுவரை நேருக்கு நேர்
இதுவரை பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் 20 ஓவர் கிரிக்கெட்டில் 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 11 ஆட்டங்களில் நியூசிலாந்தும், 17 ஆட்டங்களில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
மைதானம் எப்படி?
போட்டி நடக்கக்கூடிய சிட்னி மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கக் கூடிய ஆடுகளம் ஆகும். இந்த உலகக் கோப்பையில் இந்த மைதானத்தில் நடந்த 6 ஆட்டங்களில் 5 இல் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. அதனால் டாஸ் ஜெயிக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
சிட்னி மைதானத்தில் டாஸ் வென்ற அணி 8 முறையும், டாஸ் தோற்ற அணி 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கக்கூடிய சிட்னி மைதானத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திற்கு எதிராக 221 ரன்களை விளாசியுள்ளது. குறைந்தபட்சமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக வங்கதேசம் 101 ரன்களை எடுத்துள்ளது. இந்த மைதானத்தில் இந்திய அணி அதிகபட்சமாக 200 ரன்களை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சேஸ் செய்து அசத்தியுள்ளது. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 168 ரன்களை எடுத்துள்ளது.
இரு அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:
பாகிஸ்தான்
முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகர் அகமது, முகமது நவாஸ், ஷதப் கான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்.
நியூசிலாந்து
பின் ஆலென், டிவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், சான்ட்னெர், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட், சோதி, லோக்கி பெர்குசன்.
PAK vs NZ Semi-final LIVE: விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்த பாகிஸ்தான்.. ரிஸ்வான், பாபர் அபாரம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 12 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. பாபர் அசாம் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.
PAK vs NZ Semi-final LIVE: அதிரடி காட்டும் ரிஸ்வான்.. 4 ஓவர்களில் 40 ரன்கள் குவித்த பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதி போட்டியில் 5 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 47 ரன்கள் எடுத்துள்ளது.




















