Pakistan Cricket: தரவரிசையில் நம்பர் 1.. கூட்டுமுயற்சிக்கு கிடைத்த வெற்றி.. மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணி..!
Pakistan Cricket Team: ஒருநாள் தரவரிசயில் ஆஸ்திரேலியாவை (118 புள்ளி) நூலிழை வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் முதலிடத்தை பிடித்தது
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியை விளையாட இரண்டு அணிகளும் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி இலங்கைக்கு சென்றது. இந்த தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக பேட்டிங்கில் அசத்த போகப்போகிறார்கள் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் எண்ணிருக்க, அவர்களின் எண்ணத்தை சுக்குநூறாக உடைத்தனர் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள்.
தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக்மாலும்(61) அவரை தொடர்ந்து இப்திகார் அகமது (30), சதாப் கான்(39) மட்டுமே ஒரு அளவிற்கு தாக்குப்பிடிக்க மற்றவர்கள் அனைவரும் வந்த வேகத்திலேயே ஆப்கானிஸ்தான் சுழல் பந்திற்கு பலியானார்கள். இறுதியில் 47.1 ஓவரில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆதிக்கம் செலுத்திய ஆப்கானிஸ்தான் பந்து வீரர்கள் முஜீப் யுவர் ரஹமான் தலா 3 விக்கெட்டும், முகமது நபி மற்றும் ரஷீத் கான் தலா இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
மோசமான சாதனை:
பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி எளிதில் 202 ரன்கள் எடுத்து ஆட்டத்தை வென்று விடும் என்று எதிர்பார்த்த நிலையில், பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களின் அனைத்து வித்தைகளையும் இறக்கி ஆப்கானிஸ்தான் அணி வீரர்களை திணறடித்தார். இவர்களின் சிறப்பான பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் வீரகள் ஐந்து பேர் டக் அவுட் ஆனார்கள். இன்னும் சிலர் ஒற்றை ரன்களில் பெவிலியன் திரும்பினார்கள். ரஹ்மானுல்லா குர்பாஸ் (18), அஸ்மத்துல்லா உமர்சாய்(16) ரன்களுக்கு எடுத்து ஆட்டமிழந்தனர். 19.2 ஓவரில் 59 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது ஆப்கானிஸ்தான் . இதற்கு முன்பு 1986-ம் ஆண்டு ஷார்ஜாவில் நியூசிலாந்து அணி 64 ரன்கள் எடுத்ததே குறைந்த பட்ச ரன் எடுத்த அணி என்ற சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஆப்கானிஸ்தான் 59 ரன்கள் எடுத்து முறியடித்தது.
தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
பின்னர் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்ங் செய்து சிறப்பாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ் (151), இப்ராஹிம் ஜத்ரான்(80) என்று அணிக்கு நல்ல தொடக்கதை கொடுத்தனர். 50 ஓவரில் 300 ரன்கள் எடுத்தது அப்கானிஸ்தான். 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தது. இறுதில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான். இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை இரண்டாவது போட்டியிலே தன்வசம் ஆக்கியது பாகிஸ்தான்.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றியாவது வெற்று விடலாம் என்று ஆடிய ஆப்கானிஸ்தான், அந்த போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதன் மூலம் பாகிஸ்தான் நடந்த மூன்று போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது
தரவரிசை பட்டியளில் பாகிஸ்தான் நம்பர் ஒன்
நடந்து முடிந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஒருநாள் தரவரிசயில் ஆஸ்திரேலியாவை (118 புள்ளி) நூலிழை வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் முதலிடத்தை பிடித்தது. இந்திய அணி 113 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில் ”எப்போதெல்லம் நீங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறீர்களோ அது அளவில்லா மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தரும். இது பயிற்சியாளர் உட்பட ஒட்டுமொத்த அணியினரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு. இதற்கு முன்னர் நாங்கள் தரவரிசை பட்டியளில் முதல் இடத்தை பிடித்திருக்கிறோம்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அடுத்த ஆட்டத்திலேயே தோற்று அந்த இடத்தை இழந்துள்ளோம். ஆப்கானிஸ்தான் அணியை வென்று தற்போது ஆசிய கோப்பை தொடருக்கு செல்ல உள்ளோம். இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங் செய்வது எளிதல்ல. அவர்கள் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடுவது கடினமான ஒன்று. இந்த தொடரில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் ஆசிய கோப்பை போட்டிக்கு செல்வது ஒரு கூடுதல் நம்பிக்கையை எங்களுக்கு அளிக்கிறது” என்று கூறினார் பாபர்.