PAK vs SA T20 WC: தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் தோல்வி: 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்
உலகக் கோப்பை தொடரில் 36ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் பாகிஸ்தானும் மோதியது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை தொடரில் 36ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் பாகிஸ்தானும் மோதியது.
இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. முன்னதாக, ஆட்டத்தின் நடுவே மழை பெய்ததால் டிஎல்எஸ் முறைப்படி ஓவர்கள் 14 ஆக குறைக்கப்பட்டது. இதையடுத்து 5 ஓவர்களில் 73 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தென் ஆப்பிரிக்கா தள்ளப்பட்டது. மழை நின்றதும் மைதானம் விளையாடுவதற்கு ஏற்ற மாதிரி ஊழியர்களால் சரிசெய்யப்பட்டது. இதையடுத்து ஆட்டம் தொடங்கியது. அந்த அணி 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இது இந்த தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் தோல்வி ஆகும்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் அந்த அணி நிலைகுலைந்தது. இதையடுத்து அந்த அணி தோல்வியின் பாதைக்கு சென்றது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றுவரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது பாகிஸ்தான்.
அதன்படி, முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டு வேகம் எடுத்தனர்.
Pakistan keep semi-final hopes alive, clinching a win in the Group 2 clash against South Africa 🌟#T20WorldCup | #PAKvSA | 📝: https://t.co/3VVq7VAJLt pic.twitter.com/hfsNzCivam
— ICC (@ICC) November 3, 2022
மிடில் ஆர்டரில் களம் புகுந்த இஃப்திகர் அகமது அரை சதம் விளாசி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நவாஸ், ஷதாப் கான் ஆகியோரும் சிறப்பாக விளையாடினர். ஷதாப் கான் அரை சதம் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்த வழிவகுத்தார்.
20 பந்துகளில் அரை சதம் பதிவு செய்து அசத்தினார் ஷதாப் கான். நவாஸ் 28 ரன்களில் நடையைக் கட்டினார். அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோர்ட்ஜே 4 ஓவர்கள் வீசி 41 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பர்னெல், ரபடா, லிங்கி கிடி, ஷம்சி ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். இவ்வாறாக பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் 6 எக்ஸ்டிராக்களை வீசினர்.
கேப்டன் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா 186 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக பவுமாவும், குவின்டன் டி காக்கும் களமிறங்கினர். குவின்டன் டக் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து களமிறங்கிய ரிலீ ரோசோவ் 7 ரன்களில் நடையைக் கட்டினார்.
இரண்டு விக்கெட்டுகளையும் ஷாஷீன் அஃப்ரிடி வீழ்த்தினார். கேப்டன் பவுமா 36 ரன்கள் எடுத்திருந்தபோது ஷதாப் கான் வீசிய பந்தில் அவர் ரிஸ்வானிடம் கேட்ச் ஆகி பெவிலியன் சென்றார். அடுத்த களமிறங்கிய எய்டன் மார்க்ரம் 20 ரன்களிலும், கிளாசென் 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பு உள்ளது.