MLC 2024: எம்.எல்.சி லீக்.. டிஎஸ்கே அணிக்காக களம் இறங்கும் லக்னோ வீரர்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் டிஎஸ்கே அணிக்காக நட்சத்திர வீரர் நவீன் உல் ஹக் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
மேஜர் லீக் கிரிக்கெட்:
கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றிற்கு கூட தகுதி பெறமால் வெளியேறியது. அதே நேரம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் நவீன் உல் ஹக் இந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி:
இந்த நிலையில் நவீன் உல் ஹக்கின் பந்து வீச்சு சென்னை அணியின் நிர்வாகிகளை ஈர்த்துள்ளது. இச்சூழலில் தான் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட நவீன் உல் ஹக் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
முன்னதாக டேரல் மிட்சல், சான்ட்னர், பாப் டூ பிளசிஸ்,டெவோன் கான்வே, மார்க்ரம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தான் நவீன் உல் ஹக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
முதல் முறையாக விளையாட உள்ள நவீன் உல் ஹக்:
Naveen Ul Haq will be part of Texas Super Kings in the MLC. pic.twitter.com/uFBIDpgR7X
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 23, 2024
எம்.எல்.சி லீக்கில் மொத்தம் 6 அணிகள் விளையாட உள்ளன. இந்த 6 அணிகளில் 4 ஐபிஎல் அணிகள் உரிமையாளர்களுக்கு சொந்தமானவை. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், நியூயார்க் ஏஐ, எல்ஏ நைட் ரைடர்ஸ், சியாட்டில் ஓர்காஸ் ஆகிய அணிகள் தான் அவை. இந்நிலையில் தான் இந்த லீக்கில் முதன் முறையாக நவீன் உல் ஹக் விளையாட உள்ளார்.
மேலும் படிக்க: IPL 2024: எலிமினேட்டரில் தோற்ற RCB; பங்கமாய் கலாய்த்த முன்னாள் CSK வீரர்!
மேலும் படிக்க: Paris Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் பயிற்சிக்கு செல்லும் பி.வி.சிந்து -லக்ஷ்யா சென்! நிதி அளிக்க MOC ஒப்புதல்!