T20 World Cup 2024: மிட்செல் மார்ஷ் தலைமையில் உலகக் கோப்பையில் களம்.. அதிரடியாக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி!
Australia T20 World Cup Squad 2024: மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வருகின்ற ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பையில் களமிறங்குகிறது.
இந்திய அணியை தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதையடுத்து, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வருகின்ற ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பையில் களமிறங்குகிறது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடி வரும் பல்வேறு ஆஸ்திரேலிய வீரர்கள், அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்துள்ளனர்.
AUSTRALIA'S T20 WORLD CUP SQUAD 🏆
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 1, 2024
Marsh (C), Cummins, Agar, Tim David, Ellis, Green, Hazlewood, Head, Inglis, Maxwell, Starc, Stoinis, Wade, Warner and Zampa. pic.twitter.com/5k40YoxkET
யார் யார் அணியில்..?
ஆஸ்திரேலியாவின் டி20 உலகக் கோப்பை அணியில் கேமரூன் கிரீனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கிரீன் தனது கடைசி டி20 போட்டியை நவம்பர் 2022ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணிக்காக 8 டி20 போட்டிகளில் விளையாடி 139 ரன்களுடன் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல், இந்த அணியில் இடம்பிடித்துள்ள கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடவில்லை.
மெக்குர்க்கு இடம் இல்லை:
ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க்கு வாய்ப்பு வழங்கவில்லை. 22 வயதான இவர், பிக் பாஷ் முதல் ஐபிஎல் போட்டிகள் வரை அதிரடியாக விளையாடி அனைவரது மனதையும் கவர்ந்தார்.
2014 முதல் ஒவ்வொரு டி20 உலகக் கோப்பையிலும் ஸ்மித் அணியில் இடம்பெற்றார். ஆனால், இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இடம் கிடைக்காது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பந்துவீச்சை பொறுத்தவரை மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட், நாதன் எல்லிஸ் ஆகியோருடன் ஆடம் ஜம்பாவும் இடம் பிடித்துள்ளார்.
போட்டி விவரம்:
டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி குரூப் பியில் இடம் பிடித்துள்ளார். மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வருகின்ற ஜூன் 5ம் தேதி ஓமனுக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 8ஆம் தேதி இங்கிலாந்தையும், ஜூன் 11ஆம் தேதி நமீபியாவையும் எதிர்கொள்கிறது. ஜூன் 15 ஆம் தேதி, ஆஸ்திரேலிய அணி தனது கடைசி குரூப் போட்டியில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது.
We weren’t sure how to announce this year’s @T20WorldCup squad, so we asked a few of our friends to do it for us…#T20WorldCup pic.twitter.com/6rQZEe2LBQ
— Cricket Australia (@CricketAus) May 1, 2024
கடந்த டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு கூட செல்லவில்லை.
டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணி
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), பாட் கம்மின்ஸ், அஸ்டன் அகர், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர் மற்றும் ஆடம் ஜம்பா.