Watch Video: வந்தான்.. போனான்.. ரிப்பீட்டு! அவுட்டான ராகுல்.. உள்ளே வந்த கோலி! அடுத்து நடந்த டிவிஸ்ட்
KL Rahul : நோ பால் பந்தில் அவுட்டான கே.எல் ராகுல் பெவிலியன் சென்று மீண்டும் உள்ளே வந்த சுவரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்து வரும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஒரு சுவரஸ்யமான சம்பவம் அரங்கேறியது. இந்திய தொடக்க வீரர் கே.எல். ராகுல் முதல் செஷனில் டக் அவுட்டாக வேண்டியது. ஆனால் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்டின் நோ-பால் விசீயதால் அவருக்கு மறுவாய்ப்பு கிடைத்தது. அப்போது நடுவர்கள் அவுட் கொடுக்காமல் அவர் உள்ளே சென்றது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
நோ பால்:
இந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்வாலுடன் இணைந்து இந்தியாவுக்காக ஓபன் செய்த ராகுல், போட்டியின் முதல் பந்திலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஸ்டார்க் பந்து வீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார் . பின்னர், போலண்ட் வீசிய முதல் ஒவரின் பந்திலேயே விக்கெட் கீப்பரின் கே.எல் ராகுல் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் நடுவர்கள் ரீப்பிளேவில் பார்த்த போது அது நோ பால் என தெரியவந்தது.
இதையும் படிங்க: Watch Video : இந்த வேகம் போதுமா குழந்தை! டக் அவுட் ஆன ஜெய்ஸ்வால் .. பழிதீர்த்த ஸ்டார்க்
உள்ளே வெளியே ஆட்டம்:
இருப்பினும், கே.எல் ராகுல் ஆடுகளத்தில் நிற்காமல் வெளியேறினார், விராட் கோலியும் பேட்டிங் ஆட மைதானத்திற்கு உள்ளே வந்தார், ஆனால் நடுவர்கள் அது நோபால் என்று ராகுலை மீண்டும் பேட்டிங் ஆட அழைத்தனர். பவுண்டரி எல்லை வரை வந்த கோலியை நடுவர்கள் மீண்டும் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் கலகலப்பான சூழல் இருந்தது.
Virat Kohli coming out then realised KL RAHUL was not out and it was no ball
— Kumar Dharmasena 1 Million (@DharmasenaNews) December 6, 2024
#AUSvsIND #YashasviJaiswal #RohitSharma𓃵 #PinkBallTest #ViratKohli𓃵 pic.twitter.com/LshPejTSpi
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பந்து ராகுலின் பேட்டை கடந்தபோது ஸ்னிக்கோவில் ஸ்பைக் காட்டவில்லை. ஆனால் ராகுல் நடுவர் அவுட் கொடுக்கும் முன்பே அதை ரிவியூ செய்யாமல் ராகுல் பெவிலியன் நோக்கி சென்றது ஆச்சரியத்தை கொடுத்தது.பின்னர் அதே ஓவரில், ராகுலை கேட்ச் கொடுத்தார், அதை ஸ்லிப்பில் நின்ற உஸ்மான் கவாஜா கோட்டைவிட்டார்.ஆனால் இந்த லக் நீண்ட நேரம் நிலைக்கவில்லை ராகுல் 64 பந்துகளில் 37 ரன்களில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
This guy is so lucky man, got a No Ball in the only ball he edged behind😭#AUSvsIND pic.twitter.com/7ix11bY9GH
— Aryan Kr. (@aryan18kr) December 6, 2024
முன்னதாக டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். தேவ்தத் படிக்கல் , துருவ் ஜூரல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவருக்கு பதிலாக கேப்டன் ரோகித் சர்மா, ஷுப்மான் கில் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை இந்தியா அணியில் இடம் பெற்றன்ர்,