(Source: ECI/ABP News/ABP Majha)
Nosthush Pradeep: டி20 உலகக்கோப்பை! அமெரிக்காவிற்காக களமிறங்கும் கர்நாடக வீரர்!
டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க உள்ள அமெரிக்க அணியில் கர்நாடகாவைச் சேர்ந்தவர் இடம்பிடித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பையில் தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் அமெரிக்காவும் பங்கேற்கிறது. அடுத்த மாதம் தொடங்க உள்ள உலகக்கோப்பைக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது.
அமெரிக்க அணியில் கர்நாடக வீரர்:
இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட பெரும்பாலான அணிகள் தங்கள் நாட்டு வீரர்களின் விவரத்தை கடந்த வாரம் அறிவித்தனர். மோனங்க் பட்டேல், ஆரோன் ஜோன்ஸ், கோரி ஆண்டர்சன், சௌரப் நெட்ரவால்கர், ஜெஸ்லி சிங், ஹர்மீத் சிங், நோஷ்டஷ் கென்ஜிகே, ஷேட்லி வான் சால்க்விக், நிதிஷ்குமார், ஆண்ட்ரீஸ் கோவ்ஸ், ஷயான் ஜஹாங்கீர், அலிகான், நிசர்க் படேல், மிலிந்த் குமார். ரிசர்வ்ட் வீரர்களாக கஜனந்த் சிங், டிரைஸ்டேல், யாசிர் முகமது ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அமெரிக்க அணியின் கேப்டன் உள்பட அமெரிக்க அணியில் இடம்பிடித்துள்ள பெரும்பாலோனார் இந்தியர்களே ஆவார்கள். அவர்களில் கர்நாடகவைச் சேர்ந்த நோஷ்டஸ் கெஞ்சிகே இடம்பிடித்துள்ளார். நோஷ்டஸ் முதன் முதலாக 2019ம் ஆண்டு அமெரிக்க அணிக்காக அறிமுகமானார். இவர் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பெங்களூரில் உள்ளூர் கிரிக்கெட் கிளப்பிற்காக பல போட்டிகளில் ஆடியுள்ளார். பின்னர், அமெரிக்கா சென்று அங்கு குடியேறிவிட்டார்.
உலகக்கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா?
இதுகுறித்து பேசிய கெஞ்சிகே, “ நான் அமெரிக்காவிற்கு சென்றபோது, கிரிக்கெட்டை முடித்துவிட்டதாக நினைத்தேன். நான் அங்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடினாலும் அங்கு வேலைக்குச் சென்றேன். இந்தியாவில் போல விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல் நாங்கள் இங்கு அமெரிக்காவில் வேலையிலும் கவனத்தை செலுத்துவோம்.” என்று கூறினார்.
அமெரிக்க அணி உலகக்கோப்பைத் தொடரில் வரும் ஜூன்1ம் தேதி கனடா அணிக்கு எதிராக ஆடுகிறது. குரூப் ஏ பிரிவில் கனடா, அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி ஆகியோருடன் அமெரிக்கா களமிறங்குகிறது. 33 வயதான நோஸ்டஸ் பிரதீப் கென்ஜிகே ஒரு சுழற்பந்துவீச்சாளர் ஆவார். இவர் இந்த உலகக்கோப்பைத் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கருதப்படுகிறது.
இந்தியர்கள்:
அமெரிக்க அணியில் இடம்பிடித்துள்ள கேப்டன் மோனங்க் படேல், சௌரப் நெட்வால்கர், ஜெஸ்ஸி சிங், ஹர்மீத் சிங், ஷயான் ஜஹாங்கீர், அலிகான், நிசரக் படேல், மிலிந்த் குமார் ஆகியோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
மேலும் படிக்க: GT vs CSK: டாஸ் வென்ற சி.எஸ்.கே..பந்து வீச்சு தேர்வு; இமாலய இலக்கை நிர்ணயிக்குமா குஜராத்?
மேலும் படிக்க: MS Dhoni: கடைசியாக களம் இறங்கும் தோனி..காரணம் சொன்ன ஸ்டீபன் பிளம்மிங்!விவரம் உள்ளே!