Jasprit Bumrah:இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்; துணைக் கேப்டனான பும் பும் பும்ரா!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி 2 போட்டிகள் கொண்ட வங்கதேச அணிக்கு எதிரான தொடரை வென்றது. அதேபோல், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை வென்றது. இதனைத் தொடர்ந்து இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் சொந்த மண்ணில் நடைபெற உள்ளது. அதன்படி, இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதற்கான 16 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. அதில்,ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்த அணியில் வங்கதேச தொடரில் இடம்பெற்றிருந்த 16 வீரர்களில் 15 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். அந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இடம்பெற்றிருந்த யஷ் தயால் மட்டும் இந்த அணியில் இடம்பெறவில்லை. அறிவிக்கப்பட்டிருக்கும் 4 வீரர்கள் அடங்கிய ரிசர்வ் பட்டியலிலும் அவர் இடம்பெறவில்லை.
துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா:
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பந்து வீச்சாளர்கள் கேப்டன்ஷி குறித்து பும்ரா பேசி வரும் நிலையில் தற்போது இந்திய அணியின் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்தியாவை இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் வழிநடத்தியிருக்கிறார் பும்ரா.
இந்திய அணி:
ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஜஸ்ப்ரித் பும்ரா (துணைக் கேப்டன்), யஷஷ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
ரிசர்வ் பிளேயர்கள்: மயாங்க் யாதவ், ஹர்ஷித் ராணா, நித்திஷ் குமார் ரெட்டி, பிரஷித் கிருஷ்ணா