![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
James Anderson Test Record: உலகின் இரண்டாவது வீரர்: 30 வயதை கடந்து, முத்தான சாதனை படத்த ஆண்டர்சன்..!
30 வயதைத் தாண்டிய பிறகு 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய உலகின் இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
![James Anderson Test Record: உலகின் இரண்டாவது வீரர்: 30 வயதை கடந்து, முத்தான சாதனை படத்த ஆண்டர்சன்..! James Anderson becomes second cricketer in world to play 100 Test matches after crossing age of 30 James Anderson Test Record: உலகின் இரண்டாவது வீரர்: 30 வயதை கடந்து, முத்தான சாதனை படத்த ஆண்டர்சன்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/14/5c00f725a84be951fbace6beae0694aa_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில், டாம் லாதம் ஆட்டமிழக்க செய்ததன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சன் 650 விக்கெட்டுகளை எடுத்து புது சாதனை ஒன்றை படைத்தார். மேலும், சர்வதேச அளவில் 650 விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது.
இதுதவிர தனது பெயரில் ஆண்டர்சன் மேலும் ஒரு சிறப்பான சாதனையை படைத்துள்ளார். 30 வயதைத் தாண்டிய பிறகு 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய உலகின் இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
The only pacer to reach 𝟔𝟓𝟎 Test wickets
— ITW Sports (@ITWSports) June 14, 2022
behold James Anderson 👑#ITWSports #ENGvNZ #JamesAnderson #Anderson #Cricket pic.twitter.com/CYuabr1jzy
இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் அலெக் ஸ்டீவர்ட் 30 வயதைத் தாண்டியதில் இருந்து அதிக 107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதே சமயம் இது ஆண்டர்சனின் 100வது டெஸ்ட் போட்டியாகும். சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் வரிசையில் இருந்து 95-95 டெஸ்ட்களுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வா 30 வயதை எட்டியதில் இருந்து 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
6️⃣5️⃣0️⃣
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 13, 2022
Another milestone for @jimmy9! #ENGvNZpic.twitter.com/YELYiNHKEx
வேகப்பந்து வீச்சாளர் என்பதால் ஆண்டர்சன் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருப்பதும் சிறப்பு. 39 வயதிலும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். ஆண்டர்சன் பந்துவீசுவதைப் பார்த்தால், இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு அவர் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவார் என்று தெரிகிறது. இந்த விஷயத்தில் அலெக் ஸ்டீவர்ட்டை விஞ்சி உலக சாதனை படைக்கும் வாய்ப்பு ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு தற்போது கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)