Kevin O'Brien Retirement: 16 ஆண்டு கிரிக்கெட்.. உலகக்கோப்பையில் இல்லா ஏமாற்றம்... ஓய்வை அறிவித்த கெவின் ஓ பிரையன்!
அயர்லாந்து கிரிக்கெட் ஆல் ரவுண்டர் கெவின் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
![Kevin O'Brien Retirement: 16 ஆண்டு கிரிக்கெட்.. உலகக்கோப்பையில் இல்லா ஏமாற்றம்... ஓய்வை அறிவித்த கெவின் ஓ பிரையன்! Ireland All-Rounder Kevin O'Brien Announces Retirement From International Cricket, know details Kevin O'Brien Retirement: 16 ஆண்டு கிரிக்கெட்.. உலகக்கோப்பையில் இல்லா ஏமாற்றம்... ஓய்வை அறிவித்த கெவின் ஓ பிரையன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/16/03bdd5bb601bee6e5bcad81d6b665b7b1660646410157175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அயர்லாந்து கிரிக்கெட் ஆல் ரவுண்டர் கெவின் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டில் அயர்லாந்து அணிக்காக அறிமுகமான ஓ'பிரையன் 20 ஆண்டுகளின் அயர்லாந்து அணி வெளியுலகிற்கு தெரிய முக்கிய காரணமாக இருந்தவர். பெங்களூரில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் கெவின் ஓ பிரையன் இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அயர்லாந்து 328 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரைத் எடுத்தது எந்தவொரு தீவிர கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. இதன் மூலமே அயர்லாந்து அணியையும், தன்னையும் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடையாள படுத்தினார்.
Happy retirement Kevin O'Brien.
— CRICKET VIDEOS🏏 (@Abdullah__Neaz) August 16, 2022
We will never forget this all time greatest ODI knock.pic.twitter.com/2cvMsHneve
இதுவரை கெவின் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று டெஸ்ட், 153 ஒருநாள் மற்றும் 110 டி20 போட்டிகளில் அயர்லாந்து அணிக்காக விளையாடியுள்ளார். அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 5850 ரன்கள் மற்றும் 172 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
Thanks ☘️ pic.twitter.com/E4335nE8ls
— Kevin O'Brien (@KevinOBrien113) August 16, 2022
இந்த நிலையில், கெவின் ஓ'பிரையன் தனது ட்விட்டர் பதிவில் தனது ஓய்வை அறிவித்தார். அதில், “இந்த ஆண்டு T20 உலகக் கோப்பைக்குப் பிறகு தான் முதலில் ஓய்வு பெறத் திட்டமிட்டதாகவும், ஆனால் உலகக்கோப்பை அயர்லாந்து அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பதால் எனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறேன்.
கிட்டதட்ட 16 வருடங்கள் எனது நாட்டிற்காக 389 போட்டிகளுக்கு விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவிக்கிறேன். ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பையில் எனது வாழ்க்கையை முடித்துவிடுவேன் என்று எதிர்பார்த்தேன். தேர்வாளர்களும் நிர்வாகமும் அதை எதிர்பார்க்கவில்லை.
நான் அயர்லாந்திற்காக விளையாடும் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து மகிழ்ந்தேன். ஆடுகளத்தில் பல நண்பர்களை உருவாக்கி கொண்டேன். மேலும் சர்வதேச அணிக்காக விளையாடிய காலத்திலிருந்து எனக்கு பல மகிழ்ச்சியான நினைவுகள் உள்ளன. இது இப்போது எனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திலும் எனக்கான எனது வாழ்க்கையிலும் உள்ளது. நான் ஓய்வு பெறும் நேரம் சரியானது.
அயர்லாந்தில் எனது சொந்த பயிற்சி அகாடமியை வளர்க்க விரும்புகிறேன். என்னுடைய எதிர்காலத்தில் சில அற்புதமான வாய்ப்புகள் வரவுள்ளன. வெளிநாட்டில் பயிற்சி அனுபவத்தை தொடர்வேன். மேலும் எதிர்காலத்தில் சில சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)