IPL 2022 Auction: அகமதாபாத், லக்னோ அணிகள் தேர்ந்தெடுத்த வீரர்கள் அறிவிப்பு... கேப்டன்கள் யார்? - முழு விவரம்
2021 சீசன் வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரு அணிகளும் தலா 3 வீரர்களை தேர்வு செய்திருக்கிறது.
ஐபிஎல் 2022 தொடருக்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதில், ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் இந்த மெகா ஏலம் நடைபெறும் என்பதை பிசிசிஐ உறுதி செய்தது.
2021 சீசன் வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், 2022 சீசன் முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரு அணிகளும் தலா 3 வீரர்களை தேர்வு செய்திருக்கிறது.
ஏற்கனவே கிடைத்த தகவலின்படி, அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக விளையாடி வந்த ஹர்திக், அகமதாபாத்தின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, மற்றொரு புதிய அணியான லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இரு அணிகளும் தேர்ந்தெடுத்திருக்கும் வீரர்கள் விவரம்:
அகமதாபாத் அணி:
ஹர்திக் பாண்ட்யா - 15 கோடி ரூபாய்
ரஷீத் கான் -15 கோடி ரூபாய்
சுப்மன் கில் - 8 கோடி ரூபாய்
🤩புதுசு கண்ணா புதுசு✌️
— Star Sports Tamil (@StarSportsTamil) January 21, 2022
✨புதிய அணி #TeamAhmedabad தேர்ந்தெடுத்துள்ள நட்சத்திரங்கள்✨#VIVOIPLRetention #VIVOIPL pic.twitter.com/EnibNyBu4e
அகமதாபாத் அணியிடம் மீதமுள்ள தொகை
செலவிட்ட தொகை - 38 கோடி
கழிக்கப்பட்ட தொகை - 38 கோடி
மீதமுள்ள தொகை - 52 கோடி
லக்னோ அணி:
கே.எல்.ராகுல் - 17 கோடி ரூபாய்
ஸ்டையோனிஸ் - 9.2 கோடி ரூபாய்
ரவி பிஷ்னாய் - 4 கோடி ரூபாய்
😎New Entry @TeamLucknowIPL 🏏
— Star Sports Tamil (@StarSportsTamil) January 21, 2022
✨லக்னோ அணி தேர்வு செய்துள்ள கிரிக்கெட் Super Stars✨ #VIVOIPLRetention #VIVOIPL pic.twitter.com/KIGJNcIxbB
லக்னோ அணியிடம் மீதமுள்ள தொகை
செலவிட்ட தொகை - 30.2 கோடி
கழிக்கப்பட்ட தொகை - 38 கோடி
மீதமுள்ள தொகை - 58 கோடி
கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாகவும் மற்றும் மூன்றாவது அலை பயம் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை பிசிசிஐ ஒத்தி வைக்க திட்டமிட்டுள்ளது. அதனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் நிலவுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்