மேலும் அறிய

IND VS WI : ஸ்ரேயாஸ், ரிஷப் அபாரம்...! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 266 ரன்கள் இலக்கை நிர்ணயித்த இந்தியா...!

அகமாதாபாத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 266 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை அகமதாபாத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக களமிறங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 3 பவுண்டரிகள் அடித்து 13 ரன்களே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு, களமிறங்கிய விராட்கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். பின்னர், சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவானும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் ஆடினர்.

IND VS WI : ஸ்ரேயாஸ், ரிஷப் அபாரம்...!  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 266 ரன்கள் இலக்கை நிர்ணயித்த இந்தியா...!

இருவரும் இணைந்து ஓரிரு ரன்களாக சேகரித்தனர். அவ்வப்போது ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பினர். இருவரும் இணைந்து 4வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை கடந்தனர். அணியின் ஸ்கோர் 152 ரன்களை எட்டியபோது சிறப்பாக ஆடி வந்த ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். அவர் 54 பந்தில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 56 ரன்கள் எடுத்திருந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில், சூர்யகுமார் யாதவ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியை சரிவில் இருந்து மீட்ட ஸ்ரேயாஸ் அய்யரும் ஹைடன் வால்ஷ் பந்தில் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 111 பந்தில் 9 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்தார்.

இதனால், இந்திய அணி மீண்டும் தடுமாறியது. 7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும், தீபக் சாஹரும் மீண்டும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய தீபக்சாஹர் பின்னர் அதிரடியாக ஆடினர். இவர்களது ஆட்டத்தால் இந்திய அணியின் ரன்வேகம் மீண்டும் அதிகரித்தது. தீபக் சாஹர் 38 பந்தில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் சிறிது நேரத்தில் 34 பந்தில் 2 பவுண்ரி 1 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்த வாஷிங்டன் சுந்தரும் ஆட்டமிழந்தார். கடைசியில் இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 265 ரன்களை எடுத்தது.

IND VS WI : ஸ்ரேயாஸ், ரிஷப் அபாரம்...!  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 266 ரன்கள் இலக்கை நிர்ணயித்த இந்தியா...!

மேற்கிந்திய தீவுகள் அணியில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டை வீழ்த்தினார். ஹைடன் வால்ஷ், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.  இந்திய அணி நிர்ணயித்துள்ள இலக்கை மேற்கிந்திய தீவுகள் எட்டிப்பிடித்து ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்க்குமா? அல்லது இந்தியா ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் இலக்கை நோக்கி களமிறங்க உள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget