IND vs SA Final: இந்தியா - தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டியில் கனமழைக்கு வாய்ப்பு.. போட்டி ரத்தானால் யார் சாம்பியன்..?
IND vs SA Final: டி20 உலகக் கோப்பை 2024 இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பை 2024ம் இறுதிப்போட்டி நாளை அதாவது ஜூன் 29ம் தேதி (சனிக்கிழமை) பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இறுதிப்போட்டி வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி காலை 10.30 மணிக்கு, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி நடைபெறும் நாளில் பார்படாஸில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப்படிபட்ட சூழ்நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே இருக்கிறதா, மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் யார் சாம்பியன் பட்டத்தை வெல்வாகள் என, ரசிகர்கள் மனதில் பல கேள்விகள் இருக்கலாம். அதற்கான பதில்கள் இங்கே..
வானிலை அறிக்கை:
அக்யூவெதர் அறிக்கையின்படி, ஜூன் 29ம் தேதி பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் மழை பெய்ய 78 சதவீதம் வாய்ப்பு உள்ளது. போட்டியானது வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்கும் நிலையில், அதிகாலை 3 மணி முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகாலை 3 மணி முதல் 10 மணி வரை மழைக்கு 50 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன.
காலை 11 மணிக்கு புயலுடன் மழை பெய்ய வாய்ப்பு 60 சதவீதம் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ் சரியான நேரத்தில் நடந்தாலும், போட்டி பாதியிலேயே நிறுத்தப்படலாம். 12 மணி முதல் 3 மணி வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு 40 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் ஸ்டேடியத்தில் சரியான நேரத்தில் காய்ந்தால்தான் போட்டி நடக்கும்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா..?
டி20 உலகக் கோப்பை 2024 இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 29ம் தேதி மழை காரணமாக போட்டி முடியாவிட்டால், ஜூன் 30ம் தேதி இரு அணிகளும் கோப்பைக்காக மோதி கொள்ளும்.
ரிசர்வ் நாளிலும் மழை பெய்தால் என்ன நடக்கும்..?
ரிசர்வ் நாளிலும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டி முடிக்காப்படாவிட்டால், இரு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர். இந்த டி20 உலகக் கோப்பையில் இதுவரை இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அசத்தும் இந்திய அணி:
𝙄𝙣𝙩𝙤 𝙏𝙝𝙚 𝙁𝙞𝙣𝙖𝙡𝙨! 🙌 🙌#TeamIndia absolutely dominant in the Semi-Final to beat England! 👏 👏
— BCCI (@BCCI) June 27, 2024
It's India vs South Africa in the summit clash!
All The Best Team India! 👍 👍#T20WorldCup | #INDvENG pic.twitter.com/yNhB1TgTHq
டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தொடர்ந்து 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கயானாவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது வெற்றியைத் தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதற்கு முன், எந்த ஒரு டி20 உலகக் கோப்பையிலும் இந்திய அணி இவ்வளவு சிறப்பாக செயல்பட்டது கிடையாது. டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக 2007-ம் ஆண்டும், 2014-ம் ஆண்டும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில், 2007 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா பட்டம் வென்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

