Viral Video: ’இவங்களுக்கு காஷ்மீர் வேணுமாம்’ : கொடியை தலைகீழாய் பிடித்த பாக் ரசிகர்.. ட்ரோல் செய்த இந்திய பார்வையாளர்கள்..
பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தாய்நாட்டின் கொடியை தலைகீழாகப் பிடித்திருந்தார். அதை பின்னிருக்கையில் அமர்ந்திருந்த இந்திய ரசிகர்கள் பார்த்துவிட்டு, சரியாக பிடிக்குமாறு கூறினர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 குரூப் 2 பிரிவு ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
ஃபைனல் மேட்ச் போன்று இருந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முன்னாள் கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி இக்கட்டான சூழலில் இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். ஆட்ட நாயகன் விருதையும் கோலி வென்றார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின்போது ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக காணப்பட்டனர். 1 லட்சம் ரசிகர்கள் வரை இடம்பெறக் கூடிய இருக்கை வசதிகள் கொண்ட இந்த மைதானத்தில் கிட்டத்தட்ட 95,000 ரசிகர்கள் இந்தப் போட்டியை கண்டு ரசித்தனர்.
போட்டியின்போது சில சுவாரசியமான சம்பவங்களும் நிகழ்ந்தன. தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மைதானத்தின் பார்வையாளர்கள் அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் "ஜன கண மன" பாடினர். இதேபோல் மற்றொரு நிகழ்வும் அரங்கேறியது. பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தாய்நாட்டின் கொடியை தலைகீழாகப் பிடித்திருந்தார். அதை பின்னிருக்கையில் அமர்ந்திருந்த இந்திய ரசிகர்கள் பார்த்து, சரி செய்யுமாறு கூறினர்.
और इन्हें #kashmir #कश्मीर चाहिए 😂 pic.twitter.com/ITwv5rUcjJ
— Dipanshu Kabra (@ipskabra) October 24, 2022
இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாகிஸ்தான் ரசிகர் தேசியக் கொடியை சரிசெய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், "இவர்களுக்கு காஷ்மீர் வேண்டுமாம்!" என அவர்கள் தெரிவித்தது, சமூக வலைதலங்களில் வைரலாகி, இந்த வீடியோவை இந்திய ரசிகர்கள் சிலர் வைரலாக்கி வருகின்றனர். இப்படியான பேச்சுக்கள் சரி என ஒரு தரப்பும், பகையையும், வெறுப்பையும் மூட்டும் பேச்சு என ஒரு தரப்பும் சமூகவலைதளத்தில் விவாத மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்
முன்னதாக, ஆஸ்திரேலியா மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய டி20 உலக கோப்பை ஆட்டத்தில் 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து கோலி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்தியா கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று உலகக்கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த விராட் கோலி, அரை சதம் கடந்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை தன்வசமாக்கியுள்ளார். அந்த சாதனைகளை அத்தனையும் பட்டியல்களாக பின்வருமாறு :
சர்வதேச டி20க்களில் அதிக ரன்கள் :
கோலி சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில், சக இந்திய வீரரான ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி 3794 ரன்களுடன் முதலிடம் பிடித்தார். 3741 ரன்களுடன் ரோகித் சர்மா இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கோலி தற்போது 110 போட்டிகளில் 51.97 சராசரி மற்றும் 138.41 ஸ்டிரைக் ரேட்டில் 3794 ரன்கள் எடுத்துள்ளார்.
அதிக ஆட்டநாயகன் விருது :
பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய விராட் கோலி நேற்று ஆட்டநாயகன் விருது பெற்றார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு 14வது ஆட்டநாயகன் விருதாகும். இவருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபியின் 13 விருதுகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் ஆறாவது ஆட்டநாயகன் விருது :
டி20 உலகக் கோப்பையில் விராட் கோலிக்கு இது 6வது ஆட்ட நாயகன் விருதாகும். இதுவரை டி20 உலகக் கோப்பையில் யாரும் இத்தனை ஆட்ட நாயகன் விருது பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.