India vs England Test: இங்கிலாந்திடம் பாஸ்பால் இருந்தால் எங்களிடம் விராட் பால் இருக்கு...! சுனில் கவாஸ்கர்!
India vs England Test: பாஸ்பால் அணுகுமுறையை எதிர்கொள்ள எங்களிடம் விராட்பால் உள்ளது என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்கர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பாஸ்பால் (Bazball) பாணி ஆட்டம் தான். குறிப்பாக சில வருடங்களுக்கு முன்பு வரை டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாகவும், ப்ரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக பெறுப்பேற்றதில் இருந்து அந்த தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதற்கான காரணம் பாஸ்பால் எனப்படும் புதிய அணுகுமுறையை பயன்படுத்தி இந்தியாவை தோற்கடிப்போம் என்று நாசர் ஹுசைன் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் எச்சரித்து வருகின்றனர்.
விராட்பால் இருக்கு:
இச்சூழலில் தான், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பாஸ்பால் அணுகுமுறையை எதிர்கொள்ள தங்களிடம் “விராட்பால்” (Viratball )இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “இங்கிலாந்து அணியிடம் பஸ்பால் இருந்தால் எங்களிடம் விராட்பால் இருக்கிறது. பாஸ்பால் இங்கே வேலை செய்யலாம். ஏனெனில் சமீபத்திய வருடங்களில் இங்குள்ள மைதானங்களில் பவுண்டரிகளின் அளவு சிறியதாகியுள்ளது. மேலும் தவறான இடத்தில் பட்டால் கூட சிக்ஸர் பறக்கும் அளவுக்கு இப்போதுள்ள பேட்டுகள் வலுவாக தயாராகின்றன. அதனால் தான் சொல்கிறேன் பஸ்பால் இங்கே வேலை செய்யலாம்.குறிப்பாக ஸ்பின்னர்கள் வரும் போது அவர்கள் பந்தை தூக்கி அடிக்க முயற்சிக்கலாம். அதனால் அவர்கள் அவுட்டாகவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் எங்களுடைய ஸ்பின்னர்களும் டி20 கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடி மனதளவில் தயாராக இருக்கின்றனர். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் விக்கெட் எடுக்கிறீர்களா இல்லையா என்பதை விட பவுண்டரி அல்லது சிக்ஸர் கொடுக்கக் கூடாது என்பதே மனநிலையாக இருக்கும். எனவே சிக்ஸர் அடித்தாலும் எங்களுடைய
பவுலர்கள் தங்களின் லென்த்தை மாற்றி சண்டையிடுவார்கள். ஹைதராபாத் நகரில் நடைபெறும் முதல் போட்டி முக்கியம். அங்குள்ள மைதானம் வேகம் மற்றும் பவுன்ஸ்க்கு கை கொடுக்கும். எனவே ஸ்பின்னர்களுக்கு எதிராக இங்கிலாந்துக்கு இது நல்ல சோதனையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?
மேலும் படிக்க: Sania Mirza khula: “குலா” என்றால் என்ன? சோயப் மாலிக்கிடம் இருந்து சானியா மிர்சா விவாகரத்து பெற்றது எப்படி?