மேலும் அறிய

Ind vs Eng 2022, 5th Test: இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் திடீர் மாற்றம்..ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியா- இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 கடந்த ஆண்டு இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றன. இதில் நாட்டிங்ஹமில் நடைபெற்ற முதல் போட்டி சமனில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. ஐந்தாவது போட்டி கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மீதமுள்ள போட்டி இந்தாண்டு ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை இந்த போட்டி நடக்கவுள்ளது. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் லீசெய்ஸ்டர் அணிக்கு எதிராக ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை 4 நாட்கள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 

இதற்கிடையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரோகித்சர்மா, ஹோட்டலில் உள்ள அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் யார் இந்திய அணியை தலைமையேற்று நடத்தப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கே.எல்.ராகுல் காயத்தால் விலகியதால் அவருக்கு பதிலாக ஜஸ்ப்ரித் பும்ரா துணைகேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில், ரோகித்சர்மாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அணியை பும்ரா வழிநடத்துவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

அதேநேரத்தில், தென்னாப்பிரிக்க தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப்பண்டிடம் கேப்டன்ஷிப் ஒப்படைக்கப்படுமா? என்றும் கேள்வி எழுந்துள்ளது. அணியின் எதிர்காலம் கருதி இந்த முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் ஆட்டம் தொடங்குவதற்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய  துணைக்கண்டத்தில் இருந்து வரும் பார்வையாளர்களை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய நேரப்படி மதியம் 3 மணி முதல் இந்த போட்டியை ரசிகர்கள் கண்டு மகிழலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
Dhoni Kohli: GOAT ரொனால்டோ ஆட்டத்தை நேரில் ரசித்த LEGENDS தோனி, கோலி
Dhoni Kohli: GOAT ரொனால்டோ ஆட்டத்தை நேரில் ரசித்த LEGENDS தோனி, கோலி
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
T20 Womens World Cup Final: டி20 உலகக்கோப்பை யாருக்கு? இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மல்லுகட்டு! சம்பவக்காரிகள் யார்? யார்?
T20 Womens World Cup Final: டி20 உலகக்கோப்பை யாருக்கு? இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மல்லுகட்டு! சம்பவக்காரிகள் யார்? யார்?

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget