மேலும் அறிய

IND vs AFG LIVE Score T20 WC: சூப்பர் 8 சுற்று.. ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா!

IND vs AFG Live Score T20 World Cup 2024: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தின் நேரலையை இங்கு பார்ப்போம்

Key Events
India vs Afghanistan Live Score T20 World Cup 2024 IND vs AFG Scorecard Commentary Live Updates Online IND vs AFG LIVE Score T20 WC: சூப்பர் 8 சுற்று.. ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா!
இந்தியா - ஆப்கானிஸ்தான்

Background

ஐசிசி டி-20 உலகக் கோப்பை:

ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடங்கி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்ற நிலையில், அவை குரூப் - ஏ, குரூப் - பி, குரூப் - சி மற்றும் குரூப் - டி என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டன.

அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.  அவை குரூப்-1 மற்றும் குரூப் 2 என பிரிக்கப்பட்டு தற்போது போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று (ஜூன் 20) நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதல்:

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, பார்படோஸில் உள்ள கென்சிங்டோன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. லீக் சுற்றில் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி 3 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியை பதிவு செய்தது. சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணியும் 3 போட்டிகளில் விளையாடும். அதன் முடிவில் இரண்டு பிரிவுகளிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 

பலம், பலவீனங்கள்:

இந்திய அணி விளையாடிய லீக் போட்டிகள் அனைத்துமே அமெரிக்காவில் தான் நடைபெற்றன. அந்த மைதானங்களில் இந்திய பேட்ஸ்மேன்களால் பெரிதாக சோபிக்க முடியவில்லை என்பதே உண்மை. அதேநேரம், பந்துவீச்சாளர்கள் கூட்டாக சேர்ந்து அபார திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

அனால், சூப்பர் 8 சுற்று போட்டிகள் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. இங்கு இந்திய அணி பேட்ஸ்மேன்கள் திறம்பட செயல்பட வேண்டியது கட்டாயம். குறிப்பாக கேப்டன் ரோஹித், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் ரன் குவித்தால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியமாகும். கோலி களமிறங்கிய 3 போட்ட்களிலும் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தால், அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தமட்டில், நடப்பு உலகக் கோப்பையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குர்பாஸ் உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்  ரன் குவிக்க, ஃபருகி போன்றோர் விக்கெட் வேட்டை நடத்தி வருகின்றனர். கேப்டன் ரஷித் கான் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களித்து அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். எனவே இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, ஒட்டுமொத்த கூட்டு முயற்சியை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

நேருக்கு நேர்:

சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை எதிர்கொண்ட 8 முறையும், இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

23:41 PM (IST)  •  20 Jun 2024

IND vs AFG LIVE Score T20 WC: இந்திய அணி வெற்றி!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

23:26 PM (IST)  •  20 Jun 2024

IND vs AFG LIVE Score T20 WC: 18 ஓவர்கள் முடிந்தது!

18 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ABP Premium

வீடியோ

Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
iPhone 16 Discount: ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
Most Cheapest Cars India: சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
Embed widget