IND W vs SA W Final: அசத்திய ஷஃபாலி- தீப்தி ! முதல் முறையாக உலகக் கோப்பையை தூக்கிய இந்தியா! கண்ணீருடன் வெளியேறி கேப்
IND W vs SA W Final Womens World Cup 2025:50 ஓவர் மகளிர் உலகக்கோப்பையை இந்திய அணி முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது.

மும்பையில் நடந்த 50 ஓவர் மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்றது
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி:
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மகளிர் 50 ஓவர் இறுதிப்போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
ஷாஃபலி அதிரடி:
இந்திய அணிக்கு ஷாபாலி வர்மா மற்றும், ஸ்மிருதி மந்தனா அதிரடியான தொடக்கம் தந்தனர், இருவரும் முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள சேர்த்தனர். மந்தனா 45 ரன்களுக்கும், ஜெமிமா 24 ரன்னுக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 20 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய ஷஃபாலி வர்மா 87 ரன்களுக்கு ஆட்டமிழந்து தனது சதத்தை தவறவிட்டார்.
ரிச்சா-தீப்தி அசத்தல்:
7வது வீரராக ரிச்சா கோஷ் தீப்தி சர்மாவுடன் இணைந்து தனது அதிரடியான பேட்டிங் மூலம் இந்திய அணியை நல்ல ஸ்கோரை நோக்கி நகர்த்தினார். ஒரு கட்டத்தில் 320 ரன்களை இந்திய நெருங்கும், என்று எதிர்ப்பார்த்த நிலையில் 49வது ஓவரில் 34 ரன்களுக்கு ரிச்சா கோஷ் ஆட்டமிழந்தார். மறுப்பக்கம் தீப்தி சர்மா தனது அரை சதத்தை கடந்தாலும் அவரால் இறுதி ஓவர்களில் அதிரடி காட்ட முடியவில்லை. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 299 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்யிணத்தது.
இந்தியா வெற்றி:
299 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ் நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், அடுத்தாக வந்த அன்னேக் போஷ் டக் அவுட்டாக போட்டி இந்திய பக்கம் திரும்பியது.
ஆனால் லாரா வோல்வார்ட் மற்றும் சுனே லூஸ் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
திருப்பம் தந்த ஷஃபாலி:
இந்த ஜோடியை பிரிக்க அனைத்து பவுலர்களை பயன்படுத்தியும் விக்கெட் எடுக்க முடியவில்லை. இதனால் ஷஃபாலி வர்மாவிடம் பந்தை கொடுத்த முதல் ஓவரிலேயே லூஸ் விக்கெட்டை எடுத்து அசத்தினார். அடுத்த வந்த மரிசான் கேப் விக்கெட்டையும் எடுத்து போட்டியை இந்திய அணி பக்கம் திருப்பினார்
போராடிய லாரா வோல்வார்ட்:
ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழ மறுப்பக்கம் கேப்டன் லாரா வோல்வார்ட் மட்டும் போராடினார். அவருடன் அன்னேரி டெர்க்சனுடன் இணைந்து 6 விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் போட்டி மீண்டும் தென் ஆப்பிரிக்கா பக்கம் திரும்பியது.
ட்விஸ்ட் வைத்த தீப்தி:
இவர்கள் பார்ட்னர்ஷிப்பை அனுபவ வீரர் தீப்தி சர்மா எடுக்க மீண்டும் போட்டிக்குள் இந்தியா வந்தது. தனி ஆளாக போராடிய கேப்டன் லாரா வோல்வார்ட் சதமடித்த நிலையில் தனது விக்கெட்டை தீப்தி சர்மாவிடம் பறிகொடுக்க இந்திய அணிக்கு கோப்பை உறுதியானது.
சாம்பியனான இந்திய அணி:
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியுற்றது. இதன் மூலம் 50 ஓவர் மகளிர் உலகக்கோப்பையை இந்திய அணி முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது. இதற்கு முன்னர் 2005 2017 ஆகிய ஆண்டுகளில் இந்திய இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை நழுவவிட்டது. ஆனால் இந்த முறை இளம் இந்திய படை அனுபவ கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருடன் இணைந்து கோப்பையை தூக்கியுள்ளது.
7 ஓவர்கள் வீசி 87 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷஃபாலி வர்மா ஆட்ட நாயகி விருது பெற்றார். தீப்தி சர்மா போட்டியின் தொடர் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அரைசதம் அடித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்கிற சாதனையும் படைத்தார்.





















