IND vs WI 1st ODI LIVE: 1000வது போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி
IND vs WI 1st ODI LIVE Updates: இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் கீழே காணலாம்.
177 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மட்டும் 60 ரன்கள் எடுத்தார். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி சற்றுமுன் வரை 19.4 ஓவர்களில் 136 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. வெற்றிக்கு இன்னும் 45 ரன்கள் மட்டுமே உள்ளது. களத்தில் தீபக் ஹூடாவும், சூர்யகுமார் யாதவும் உள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி இந்த போட்டியில் 8 ரன்கள் எடுத்த நிலையில் அல்ஜாரி ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும், அவர் 6 ரன்களை எட்டியபோது சொந்த மண்ணில் 5 ஆயிரம் ரன்களை எடுத்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். மேலும், குறைவான இன்னிங்சில் இந்த சாதனையை படைத்த வீரர் என்ற சச்சினின் சாதனையையும் முறியடித்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்துள்ள 177 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் இந்திய அணி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 3 பவுண்டரகளுடன் 18 ரன்களுடனும், இஷான்கிஷான் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சற்றுமுன் வரை 5.4 ஓவர்களில் 30 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியாவிற்கு எதிராக பேட்டிங் செய்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணியில் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பொறுப்புடன் ஆடிய ஜேசன் ஹோல்டர் மட்டும் அரைசதம் அடித்தார். அவர் 57 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். தற்போது அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 42.2 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் யுஸ்வேந்திரா சாஹல் தனது 100வது ஒருநாள் கிரிக்கெட் விக்கெட்டை வீழ்த்தினார்.
மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வரும் சூழலில், ஜேசன் ஹோல்டர் மற்றும் பாபியன் ஆலன் கூட்டணி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வருகிறது. இவர்களது கூட்டணியால் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களை சேர்த்துள்ளது. இவர்கள் நிலைத்து ஆடினால் மே.தீவுகள் அணி 200 ரன்களை கடக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவிற்கு எதிராக பேட் செய்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் சீட்டுக்கட்டு போல விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகின்றனர். அந்த அணி சற்றுமுன் வரை 7 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. சாஹல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இந்தியாவிற்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 50 ரன்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஷாய் ஹோப் 8 ரன்களிலும், பிரண்டன் கிங் 13 ரன்களிலும், டேரன் பிராவோ 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் மட்டும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Background
இந்திய கிரிக்கெட் அணி தனது 1000வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று குஜராத்தில் உள்ள அகமாதாபத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் அறிமுக வீரராக தீபக்ஹூடா களமிறங்கியுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -