புஷ்பா 2
அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது. புஷ்பா 2 சிறப்புக் காட்சியின் போது நடிகர் அல்லு அர்ஜூன் ஹைதராபாத் சந்தியா திரையரங்கத்திற்கு வருகைத் தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். ஒரு பக்கம் புஷ்பா 2 திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்து வந்தாலும் இன்னொரு பக்கம் அல்லு அர்ஜூன் கைது , நீதிமன்ற விசாரணை என சர்ச்சை நீண்டு கொண்டு சென்றது.
இத்தனை கலவரத்திற்கு மத்தியிலும் புஷ்பா 2 படத்தின் வசூலில் எந்த வித பாதிப்பும் இல்லை. புஷ்பா 2 படத்தின் 21 நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உலகளவில் புஷ்பா 2 திரைப்படம் 1705 கோடி வசூல் செய்துள்ளது