சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகம், தன்னுடைய சட்ட நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
அதென்ன SLAT தேர்வு?
ஸ்லேட் SLAT (Symbiosis Law Admission Test) என்பது, சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகம் தன்னுடைய சட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க நடத்தும் நுழைவுத் தேர்வு ஆகும். ஆண்டுதோறும் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தியா முழுவதும் உள்ள சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைக்கழக கல்லூரிகளில் சேர இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். குறிப்பாக பிஏ எல்எல்பி (Bachelor of Arts and Bachelor of Legislative Law) மற்றும் பிபிஏ எல்எல்பி (Bachelor of Business Administration and Bachelor of Legislative Law) படிப்புகளில் சேர ஸ்லேட் தேர்ச்சி முக்கியம்.
முன்னதாக டிசம்பர் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஸ்லேட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. மதிப்பெண் அட்டையும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி? (How To Check SLAT 2025 Result)
- slat-test.org என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- முகப்புப் பக்கத்தில் தோன்றும் ‘Login’ என்ற இணைப்பைத் தேர்வு செய்யவும்.
- அதில், SLAT ID அல்லது இ –மெயில் முகவரி மற்றும் கடவுச் சொல்லை உள்ளிடவும்.
- உங்களின் SLAT 2025 மதிப்பெண் அட்டை தோன்றும்.
- அதைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அல்லது https://slat2025.ishinfosys.com/SLAT20Y25/Register/Index.aspx?_gl=1*96knja*_gcl_au*MzEzNDM5OTAzLjE3MzUxOTExMjE.*_ga*MTU1MTIyNTY0Ni4xNzM1MTkxMTIy*_ga_1V1LBB8MFB*MTczNTE5MTEyMi4xLjAuMTczNTE5MTEyMi42MC4wLjEyNjkyNTY0MzY.*_ga_PYMQ1FRCLG*MTczNTE5MTEyMi4xLjEuMTczNTE5MTEyMi42MC4wLjE3MzYxMDMxMzM இணைப்பிலும் தேர்வு முடிவுகளை உடனே பெறலாம்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்காணல் தேர்வு, குழு விவாதம் ஆகியவை நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெறும்.
கூடுதல் தகவல்களுக்கு:
தொலைபேசி எண்: +91-020-61936226 / 27
டோல் ஃப்ரீ எண்: 9071013499
டெலிகிராம் இணைப்பு: https://t.me/SLATSLS
இமெயில் முகவரி: info@slat-test.org
கூடுதல் தகவல்களுக்கு: https://www.slat-test.org/