திமுக ஆட்சியில் இருந்து அகற்றும்வரை செருப்பு அணியமாட்டேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை “திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை செருப்பு அணியமாட்டேன். எனக்கு நானே சாட்டையால் அடித்துக்கொள்வேன். இந்த கேடுகெட்ட ஆட்சியில் வாழ்வது குறித்து நாளை கோவையில் எனது வீட்டின் முன் என்னை நானே சாட்டையால் அடித்து கொண்டு போராட்டம் நடத்துவேன். நாளை காலை 10 மணிக்கு போராடுவோம். கேள்வி கேட்பது எங்கள் வேலை. பதிலளிப்பது அரசின் வேலை. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கேமரா இல்லை என்று சொல்ல வெட்கமாக இல்லையா? நாளை முதல் 48 நாட்கள் விரதம் இருக்க போகிறேன். 



கையை உடைப்பதும் காலை உடைப்பதும் தண்டனையா? உண்மையான அரசாக இருந்தால் 15 தண்டனை கொடுத்திருக்க வேண்டும். 10 நாட்களில் தண்டனை வாங்கி கொடுக்க முடியும். பொய் சொல்லத்தான் என் அம்மா நேர்ந்து விட்டிருக்கிறார்களா? ரகுபதி சொல்கிறார். ஒழுக்கமா ஒரு வேலையை செய்துள்ளீர்களா? எங்களை நாங்களே வருத்திக்கொண்டு முருகப்பெருமானிடம் கேட்கிறோம். நிர்பயா ஃபண்ட் கொடுத்திருக்கிறோம். அதெல்லாம் எங்க போனது? அண்ணா பல்கலையில் சிசிடிவி வைக்க துப்பில்லை. எஃப்.ஐ.ஆரை படித்து பார்த்தால் அது ஒரு பொண்ணுக்கு மட்டும்தான் நடந்ததா என சந்தேகமாக இருக்கிறது.


FIR- லீக்கானது எப்படி..? கட்சி பொறுப்பில் இருப்பதால் மரியாதையாக பேசுறேன்.. FIR-ஐ படிக்கும் போது ரத்தம் கொதிக்கிறது.. அந்த குடும்பத்தையே நாசம் செய்துட்டீங்க.. வீதிக்கு தனி மனிதனா வந்தா வேற மாதிரி இருக்கும்" என கேள்வி எழுப்பினார்.