விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?

ரஷிய நாட்டின் ஏவுகணை தற்செயலாக அந்த விமானத்தை தாக்கி இருக்கலாம் என ராணுவ வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

Continues below advertisement

கசகஸ்தானில் நேற்று அஜர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளாகி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷிய நாட்டின் ஏவுகணை தற்செயலாக அந்த விமானத்தை தாக்கி இருக்கலாம் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

Continues below advertisement

அஜர்பைஜான் நாட்டின் பாகுவில் இருந்து ரஷியாவில் உள்ள க்ரோஸ்னிக்கு 67 பயணிகள், விமானக் குழுவினர் 5 பேர் என மொத்தம் 72 பேருடன் விமானம் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. கசகஸ்தான் நாட்டில் உள்ள அக்தா விமான நிலையம் அருகே சென்றபோது அவசரமாக தரையிறங்க அனுமதி கோரப்பட்டது.

அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?

ஆனால், ஒரு சில நிமிடங்களிலேயே அந்த விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில், 38 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 29 பேர் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம், உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இந்த விமான விபத்து குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷிய நாட்டின் ஏவுகணை தற்செயலாக அந்த விமானத்தை தாக்கி இருக்கலாம் என ராணுவ வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

விபத்தில் சிக்கிய விமானத்தின் முக்கிய பகுதிகளில் ஓட்டைகள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல், யூரோநியூஸ் மற்றும் செய்தி நிறுவனம் ஏஎஃப்பி உள்ளிட்டவை அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு இருக்கின்றன.

விபத்தா? திட்டமிட்ட சதியா?

விழுந்து சிதறிய விமானத்தின் பாகங்களில் ஏவுகணை தாக்கியது போன்ற சேதம் அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ரஷிய குடியரசின் ஒரு பகுதியாக இருக்கும் செச்சினியாவின் தலைநகரான க்ரோஸ்னிக்கு அந்த விமானம் சென்றிருக்கிறது.

ட்ரோன்கள் மூலம் உக்ரைன் அடிக்கடி தாக்குதல் நடத்தும் பகுதியாக க்ரோஸ்னி உள்ளது. ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் மூன்றாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், உக்ரைனின் முக்கிய இலக்காக க்ரோஸ்னி இருக்கிறது.

ரஷியாவின் ராணுவ செய்திகளை வெளியிடும் யூரி பொடோல்யாகா என்ற ப்ளாக்கர், இதுகுறித்து பேசுகையில், "விமானத்தின் இடிபாடுகளில் காணப்படும் (புகைப்படங்கள்) துளைகள் ஏவுகணை ஏற்படுத்திய சேதத்தைப் போலவே இருந்தன. அந்த விமானத்தை ஏவுகணை தற்செயலாக தாக்கப்பட்டிருக்கலாம்" என்றார்.

இதையும் படிக்க: Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்

 
Continues below advertisement
Sponsored Links by Taboola