IND Vs SL,1st ODI: மீண்டும் களமிறங்கும் ரோகித், கோலி - இந்தியா - இலங்கை இடையே இன்று முதல் ஒருநாள் போட்டி
IND Vs SL,1st ODI: இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
![IND Vs SL,1st ODI: மீண்டும் களமிறங்கும் ரோகித், கோலி - இந்தியா - இலங்கை இடையே இன்று முதல் ஒருநாள் போட்டி IND Vs SL1st ODI india up against srilanka in first odi today at premadasa stadium IND Vs SL,1st ODI: மீண்டும் களமிறங்கும் ரோகித், கோலி - இந்தியா - இலங்கை இடையே இன்று முதல் ஒருநாள் போட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/02/abc99a50a03e4725ae57065cd5aff56b1722564970989732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
IND Vs SL,1st ODI: இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மூலம், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர்.
இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணம்:
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, சூர்யகுமார் தலைமையிலான டி20 தொடரில் களமிறங்கியது. அதில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, இலங்கை அணியை சொந்த மண்ணிலேயே ஒயிட் வாஷ் செய்தது. இந்நிலையில், இன்று முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது.
இந்தியா Vs இலங்கை - முதல் ஒருநாள் போட்டி:
இரு அணிகளுக்கு இடையேயான போட்டி, கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. போட்டியின் நேரலையை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், சோனி லைவ் ஒடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
அணிக்கு திரும்பும் ரோகித், கோலி:
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றதை அடுத்து, ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகியோர் டி20 தொடரில் இடம்பெறவில்லை. இந்நிலையில் இன்று தொடங்கும் ஒருநாள் தொடர் மூலம், இரண்டு நட்சத்திர வீரர்களும் அணிக்கு திரும்புகின்றனர். இது இந்திய அணிக்கு பெரும் பலமாக கருதப்படுகிறது. அதோடு, ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கே.எல். ராகுல் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இதனிடையே, ரியான் பராக் மற்றும் ஹர்ஷித் ராணா போன்ற இளம் வீரர்களும், நடப்பு தொடரில் கவனம் ஈர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 168 முறை மோதியுள்ளன. அதில், இந்தியா 99 போட்டிகளிலும், இலங்கை 57 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 11 போட்டிகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
மைதானம் எப்படி?
கொழும்பு பிரேமதாசா மைதானம் தொடக்கத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும், நேரம் செல்ல செல்ல பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்குகின்றனர். இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, மிகப்பெரிய இலக்கை நிர்ணயிப்பது வெற்றிக்கு உதவலாம்.
உத்தேச அணிகள் விவரம்:
இந்தியா: ரோகித் சர்மா (கே), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், ரியான் பராக், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா
இலங்கை: சரித் அசலங்க (கே), அவிஷ்க பெர்னாண்டோ, பாத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், அகில தனஞ்சய, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷனா, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)