IND W vs SA W Final: மிரட்டும் மழை! பேட்டிங்கை தொடங்கிய இந்தியா.. ரிசர்வ் டே விதிகள் சொல்வது என்ன?
IND W vs SA W Final: மழை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால், ரிசர்வ் நாளான நவம்பர் 3 ஆம் தேதி இறுதிப் போட்டி தொடங்கவோ அல்லது முடிக்கவோ முடியாவிட்டால், இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்

இந்திய மகளிர் மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே உலகக்கோப்பை இறுதிப்போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கி நடந்து வருகிறது
நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன் படி இந்திய மகளிர் அணி தற்போது பேட்டிங் செய்து வருகின்றனர்
மழையால் தாமதம்:
பிற்பகல் 3 மணிக்கு தொடங் வேண்டிய இந்த ஆட்டம் மழையின் காரணமாக 2 மணி நேரம் தாமதமாக தொடங்கி நடைப்பெற்று வருகிறது. மழை காரணமாக இன்று இறுதிப் போட்டியை நடத்த முடியாவிட்டால், நாளை(நவம்பர் 3 ஆம் தேதி )ரிசர்வ் நாளாகக் குறிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் நாளிலும் மழை பெய்தால்?
மழை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால், ரிசர்வ் நாளான நவம்பர் 3 ஆம் தேதி இறுதிப் போட்டி தொடங்கவோ அல்லது முடிக்கவோ முடியாவிட்டால், இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பையானது பகிர்ந்து அளிக்கப்படும். மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு அணிகள் கூட்டு வெற்றியாளர்களாக இதுவரை அறிவிக்கப்பட்டதில்லை.
இதுவரை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து மட்டுமே மகளிர் உலகக் கோப்பையை வென்றுள்ளன. இந்திய அணி இதற்கு முன்பு இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, ஆனால் ஒருபோதும் பட்டத்தை வென்றதில்லை. மறுபுறம், தென்னாப்பிரிக்கா 2025 இல் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அதிரடி காட்டும் இந்தியா:
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஷாபாலி வர்மா மற்றும், ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி வருகின்றனர். இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்தியாவின் பிளேயிங் XI
ஷாபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், கிராந்தி கவுர், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர்.
தென்னாப்பிரிக்காவின் பிளேயிங் XI
லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், அன்னேக் போஷ், சுனே லூஸ், மரிசான் கேப், சினாலோ ஜாஃப்டா (விக்கெட் கீப்பர்), அன்னேரி டெர்க்சன், சோலி ட்ரையோன், நாடின் டி கிளர்க், அயபோங்கா காக்கா, நோன்குலுலெகோ மலாபா





















