மேலும் அறிய

Ind vs Sa: சாஹலை டி20 போட்டியில் தேர்வு செய்யாதா பிசிசிஐ... கடுமையாக சாடிய ஹர்பஜன் சிங்...என்ன சொன்னாருனு நீங்களே பாருங்க!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் அணியில் தேர்வாகியுள்ள சுழற்பந்து வீச்சாளர் சாஹல் டி20 அணியில் தேர்வு செய்யப்படாதது ஏன் என்று ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். 

தற்போது இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் பின்னர் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர். மேலும், டி 20 போட்டியை சூர்யகுமாரும், ஒரு நாள் போட்டியை கே.எல்.ராகுலும் வழிநடத்துவார்கள்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிங்கு சிங் மற்றும் தமிழக வீரரான சாய் சுதர்சன் ஒரு நாள் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  இது அவர்கள் விளையாட உள்ள முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி.

அதேபோல், ஒரு நாள் போட்டிகளில் சொதப்பிய சூர்யகுமார் யாதவிற்கு இந்த முறை ஒரு நாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே சஞ்சு சாம்சன் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்த முறை பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்காக டி 20 போட்டியில் சாஹல் விளையாடி இருந்தார். ஆனால், ஆசிய கோப்பை மற்றும் 2022 உலகக் கோப்பை தொடரில் ஓரங்கட்டப்பட்டார். அதேபோல் , ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் இவரை பிசிசிஐ அணியில் எடுக்கவில்லை. இத நேரம் விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பைகளில் சிறப்பாக அவர் விளையாடி இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

டி 20 அணியில் ஏன் தேர்வு செய்யவில்லை:

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் அணியில் தேர்வாகியுள்ள சுழற்பந்து வீச்சாளர் சாஹல் டி20 அணியில் தேர்வு செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர், “டி20 அணியில் சாஹல் இல்லை. குறிப்பாக ஒருநாள் அணியில் அவரை தேர்வு செய்துள்ள நீங்கள் டி20 அணியில் தேர்ந்தெடுக்கவில்லை. தேர்வுக்குழு சாஹலுக்கு வாயில் லாலிபாப் கொடுத்துள்ளார்கள்.

பெயருக்காக தேர்ந்தெடுத்துள்ளார்கள்:

அதாவது நீங்கள் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட்டில் உங்களை நாங்கள் தேர்வு செய்ய மாட்டோம். பெயருக்காக மற்றொரு தொடரில் தேர்ந்தெடுப்போம் என்பது போல் அவர்களின் முடிவு இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதே போல பேட்ஸ்மேன்களுக்கு சவாலான தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் புஜாரா, ரகானே போன்றவர்களும் தேர்வு செய்யப்படவில்லை. இளம் வீரர்களுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுப்பது நல்லது. ஆனால் ரகானே, புஜாரா அல்லது உமேஷ் யாதவ் ஆகியோரிடம் தேர்வு குழுவினர் பேசியிருக்க வேண்டும். ஏனெனில் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் உமேஷ் யாதவ் சிறப்பாக விளையாடினார்.

இருப்பினும் தற்போது கழற்றி விடப்பட்டுள்ள இந்த 3 பேரும் மீண்டும் கம்பேக் கொடுப்பது மிகவும் கடினமாகும். ஆனால் இந்தியாவுக்காக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ள அவர்களிடம் பிசிசிஐ பேச வேண்டும். குறிப்பாக ஏன் தேர்வு செய்யப்படவில்லை வருங்காலங்களில் வாய்ப்பு இருக்கிறதா என்பதை பற்றி அவர்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget